விக்ரமன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
விக்ரமன் (ஆங்கில மொழி: Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.[1] இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
விக்ரமன் Vikraman | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 30, 1964 பண்பொழில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1989– தற்சமயம் வரை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
தொகுபுது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
தொகுஎண் | ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 1990 | புது வசந்தம் | தமிழ் | சிறந்த இயக்குனர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
2 | 1991 | பெரும்புள்ளி | தமிழ் | |
3 | 1993 | கோகுலம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாம் இடம்) |
4 | 1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | தமிழ் | |
5 | 1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | |
6 | 1996 | பூவே உனக்காக | தமிழ் | |
7 | 1997 | சூரிய வம்சம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
8 | 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
|
9 | 2000 | வானத்தைப் போல | தமிழ் | சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது
|
10 | 2002 | உன்னை நினைத்து | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- (மூன்றாவது இடம்) |
11 | 2003 | பிரியமான தோழி | தமிழ் | |
12 | வசந்தம் | தெலுங்கு | பிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம். | |
13 | 2004 | செப்பவே சிறுகாலி | தெலுங்கு | உன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம். |
14 | 2006 | சென்னை காதல் | தமிழ் | |
15 | 2009 | மரியாதை | தமிழ் | |
16 | 2014 | நினைத்தது யாரோ | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயக்குனர் விக்ரமன் திரை வாழ்க்கை". Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)