மரியாதை (திரைப்படம்)
மரியாதை (Mariyadhai) 2009 இல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படத்தில் மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இயக்குநர் விக்ரமன் ஏற்கனவே இயக்கிய பூவே உனக்காக (1996), வானத்தைப் போல (2000) திரைப்படங்களைப் போல, இத்திரைப்படத்தையும் ஒரு குடும்பத் திரைப்படமாக உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் 2009 ஏப்ரல் 24 அன்று வெளியானது.[2]
மரியாதை | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | விக்ரமன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | விஜயகாந்த் மீனா மீரா ஜாஸ்மின் சம்பத் ராஜ் அம்பிகா ரமேஷ் கண்ணா |
கலையகம் | ராஜ் தொலைக்காட்சி, அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 24, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த் - அண்ணாமலை / பிச்சாண்டி (இரு வேடங்களில்)
- மீனா - இராதா
- மீரா ஜாஸ்மின் - சந்திரா பிச்சாண்டி
- அம்பிகா - அலமேலு அண்ணாமலை
- ரமேஷ் கண்ணா
- சம்பத் ராஜ் - சம்பத்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mariyadhai starts rolling from today". Chennai365.com. Archived from the original on 2008-10-10. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2015.
- ↑ "Vijayakanth and his 'Mariyadhai'". Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2015.