ரமேஷ் கண்ணா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக துணை இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதில் நடித்தவர்.
காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் ஆனார். உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.