தென்காசி மாவட்டம்

இது தமிழகத்தில் அமைந்துள்ள முப்பத்து எட்டு மாவட்டங்களுள் ஒன்று.


தென்காசி மாவட்டம் (Thenkasi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாகும். மேற்க்கே கேரள மாநிலமும் கிழக்கே திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டதையும் வடற்கு விருதுநகர் மாவட்டதையும் எல்லையாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தென்காசி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4][5] புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்ட்டார்.[6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]

தென்காசி மாவட்டம்
பொதிகை மாவட்டம்
—  மாவட்டம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,

திருவேங்கடம்

மாவட்ட துவக்கம் 22 நவம்பர் 2019 [1]
தலைமையகம் தென்காசி
மிகப்பெரிய நகரம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[2]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[3]
மாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப
சட்டமன்றம் (தொகுதிகள்) 5 (5)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்     37 °C (99 °F)
     22 °C (72 °F)

= மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]

வருவாய் கோட்டங்கள்தொகு

 1. தென்காசி
 2. சங்கரன்கோவில்

வருவாய் வட்டங்கள்தொகு

 1. கடையநல்லூர் வட்டம்
 2. சங்கரன்கோயில் வட்டம்
 3. சிவகிரி வட்டம்
 4. ஆலங்குளம் வட்டம்
 5. வீரகேரளம்புதூர் வட்டம்
 6. தென்காசி வட்டம்
 7. செங்கோட்டை வட்டம்
 8. திருவேங்கடம் வட்டம்

நகராட்சிகள்தொகு

 1. கடையநல்லூர்
 2. தென்காசி
 3. சங்கரன்கோவில்
 4. புளியங்குடி
 5. செங்கோட்டை

பேரூராட்சிகள்தொகு


 1. குற்றாலம்
 2. சுரண்டை
 3. கீழப்பாவூர்
 4. பண்பொழி
 5. இலஞ்சி
 6. செங்கோட்டை புதூர்
 7. அச்சம்புதூர்
 8. ஆலங்குளம்
 9. ஆய்க்குடி
 10. இராயகிரி
 11. சாம்பவர் வடகரை
 12. சுந்தரபாண்டிபுரம்
 13. வாசுதேவநல்லூர்
 14. சிவகிரி
 15. திருவேங்கடம்
 16. மேலகரம்
 17. வடகரை
 18. கடையம்
 19. ஆழ்வார்குருச்சி
 20. வீரகேரளம்புதூர்
 21. வீராணம்

ஊராட்சி ஒன்றியங்கள்தொகு

இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

 1. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்
 2. மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
 3. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
 4. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
 5. தென்காசி ஊராட்சி ஒன்றியம்
 6. செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
 7. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
 8. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
 9. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்தொகு

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்தொகு

. பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர் தர்கா

. தென்காசி ஸையது சுலைமான் தர்கா

நீர்த்தேக்கங்கள்தொகு

 • ராமநதி
 • கடனாநதி
 • குண்டாறு
 • அடவிநயினார்
 • கருப்பாநதி
 • மோட்டை
 • செண்பகவல்லி அணை

அருவிகள்தொகு

. பழத்தோட்டம் அருவி (ONLY VIP)

. எருமைசாவடி அருவி (தனியார்)

. தேன் அருவி ( வனம் பகுதி )

 • பேரருவி
 • பழைய குற்றால அருவி
 • சிற்றருவி
 • ஐந்தருவி
 • புலியருவி
 • செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

நதிகள்தொகு

 • சிற்றாறு
 • குண்டாறு நதி
 • ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.
 • நிட்சேபநதி

மேற்கோள்கள்தொகு

 1. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
 2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
 5. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
 6. புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
 7. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
 8. தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
 9. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_மாவட்டம்&oldid=2988511" இருந்து மீள்விக்கப்பட்டது