சுந்தரபாண்டிபுரம்

சுந்தரபாண்டிபுரம்(ஆங்கிலம்:Sundarapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

சுந்தரபாண்டிபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,987 (2011)

682/km2 (1,766/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.18 சதுர கிலோமீட்டர்கள் (5.09 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sundarapandiapuram

அமைவிடம்தொகு

தென்காசி - சுரண்டை உள்வழி சாலையில் உள்ள சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்;சுரண்டையிலிருந்து 3 கிமீ தொலைவிலும்; சம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

    சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு 1,1exp,D6, மினிபஸ் உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் பாவூர்சத்திரத்தில் இருந்தும் தென்காசிக்கு சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் வழியாக திருமலைக்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2532 வீடுகளும், 8987 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

கோவில்கள்தொகு

இங்கு ஊரின் கீழ் பகுதியில் 19ம் நூற்றாமண்டுக்கு முற்பட்ட மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோவிலும் வடமேற்கில் மிக பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி (பெருமாள்) கோவிலும் வட கிழக்கு பகுதியில் குளத்தின் அருகில் ரம்மியமான சூழலில் திரிபுர சுந்தரி முப்பிடாதி(முப்பிடாரி=மூன்று பிடரி, மூன்று முகம்) அம்மாள் கோவிலும் அமைந்துள்ளது. மேலும் கிருத்துவ சர்ச் ஊரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குலதெய்வங்களுக்கென தனிதனி கோவிலும் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர்.

தொழில்கள்தொகு

இங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே உள்ளது. மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மட்பாண்டம் செய்தல்,தயிர் கடைதல்,மீன்பிடித்தல்,கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர்.

சுற்றுலாதொகு

அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sundarapandiapuram Population Census 2011
  6. Sundarapandiapuram Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரபாண்டிபுரம்&oldid=2790448" இருந்து மீள்விக்கப்பட்டது