கரிவலம்வந்தநல்லூர்

கரி வலம் வந்த நல்லூர் (Kari Valam Vantha Nallur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், கரி வலம் வந்த நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5]

கரி வலம் வந்த நல்லூர்
—  கிராமம்  —
கரி வலம் வந்த நல்லூர்
இருப்பிடம்: கரி வலம் வந்த நல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°15′41″N 77°36′32″E / 9.261518°N 77.608753°E / 9.261518; 77.608753
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இதற்கு கருவை என்ற மற்றுமோர் பெயரும் உண்டு. கரி வலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

இவ்வூரின் சிறப்புகள்

தொகு

கோவில்

தொகு

இந்த ஊரில் பால்வண்ணநாதர் உடனுறை ஒப்பனை அம்மன் கோவில் உள்ளது.

தலவரலாறு

தொகு

(கரி=யானை) இந்த இடத்தில் யானை சிவனை வலம் வந்து தரிசித்ததாக வரலாறு கூறுகிறது.

இவ்வூரிலே வாழ்ந்த சிறந்த தமிழ் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் இத்தலத்தைப் பற்றியனவே யாகும்.

  1. ஆதிமூல அய்யனார் உத்தண்டகாளை சுவாமி திருக்கோவில்.ஊரின் முக்கிய காவல் தெய்வமாக உத்தண்ட காளை சுவாமி இருப்பதாக ஊர்மக்களால் நம்பப்படுகிறது.மேலும் இக்கோவில் சைவ செட்டியார்கள்,சைவ பிள்ளைமார் ஜாதி பிரிவினரின் குலதெய்வ கோவிலாகும்.[சான்று தேவை]

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலம்

தொகு

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களுள் இது அக்கினித்தலம் ஆகும்.[6]

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடம்

தொகு

மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களில் ஒன்று. இங்குள்ள நிட்சேப நதியில்தான் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியின் நினைவாக இந்த நதிக்கரை அருகே சிறு சதுக்கம் கட்டப்பட்டது. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
  7. http://puthiyathalaimurai.tv/people-demand-to-make-memorial-in-nellai[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிவலம்வந்தநல்லூர்&oldid=3673599" இலிருந்து மீள்விக்கப்பட்டது