கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் is located in தமிழ் நாடு
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
ஆள்கூறுகள்:9°16′11″N 77°32′28″E / 9.2697°N 77.5410°E / 9.2697; 77.5410
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி மாவட்டம்
அமைவிடம்:கரிவலம்வந்தநல்லூர்
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
ஏற்றம்:184 m (604 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பால்வண்ணநாதர்
தாயார்:ஒப்பனை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், சங்கரன்கோயிலிலிருந்து 10 கிமீ தொலைவில், வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

குலசேகர பாண்டியன் வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்தபோது ஒரு யானை எதிர்ப்பட்டதாகவும், அந்த யானையை துரத்த அவர் சென்றபோது, அது சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு இறைவன் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாகப் பெற்றதால் இப்பெயரைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.[1]

இறைவன், இறைவி

தொகு

இங்குள்ள மூலவர் பால்வண்ணநாதர் ஆவார். படிக லிங்கமாக இருப்பதால் பால்வண்ணநாதர் என்றும், களமரம் தலமரமாக இருப்பதால் திருக்களா ஈசர் என்றும், திருமுகம் விளங்கித்தோன்றுகின்ற லிங்க வடிவமாக இருப்பதால் முகலிங்கர் எனவும் மூலவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி ஒப்பனை அம்மன் ஆவார்.[1]

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

தொகு

இங்குள்ள இறைவனைப் பற்றி எழுந்த பாடல்களைக் கொண்ட நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி எனப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, பதிப்பாசிரியர் மணி.மாறன், தஞ்சாவூர் சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2016

வெளி இணைப்புகள்

தொகு