தமிழ்நாட்டின் நகராட்சிகள்
இக்கட்டுரை |
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 148 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
இவை சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல்நிலை, இரண்டாம்நிலை என்கிற நிலைகளில் 142 நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.
திருவள்ளூர் மாவட்டம் தொகு
- திருவள்ளூர்
- திருத்தணி
- பூந்தமல்லி
- திருவேற்காடு
- பொன்னேரி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- திருநின்றவூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
செங்கல்பட்டு மாவட்டம் தொகு
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- மறைமலைநகர்
- நந்திவரம்-கூடுவாஞ்சேரி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
காஞ்சிபுரம் மாவட்டம் தொகு
- குன்றத்தூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- மாங்காடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
வேலூர் மாவட்டம் தொகு
இராணிப்பேட்டை மாவட்டம் தொகு
- அரக்கோணம்
- ஆற்காடு
- இராணிப்பேட்டை
- வாலாஜாபேட்டை
- மேல்விஷாரம்
- சோளிங்கர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
திருப்பத்தூர் மாவட்டம் தொகு
விழுப்புரம் மாவட்டம் தொகு
- விழுப்புரம்
- திண்டிவனம்
- கோட்டக்குப்பம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொகு
- கள்ளக்குறிச்சி
- திருக்கோவிலூர்(2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- உளுந்தூர்பேட்டை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
கடலூர் மாவட்டம் தொகு
- சிதம்பரம்
- விருத்தாச்சலம்
- பண்ருட்டி
- நெல்லிக்குப்பம்
- வடலூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- திட்டக்குடி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
திருவண்ணாமலை மாவட்டம் தொகு
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகு
தருமபுரி மாவட்டம் தொகு
சேலம் மாவட்டம் தொகு
- எடப்பாடி
- ஆத்தூர்
- மேட்டூர்
- நரசிங்கபுரம்
- தாரமங்கலம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- இடங்கணசாலை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
நாமக்கல் மாவட்டம் தொகு
நீலகிரி மாவட்டம் தொகு
கோயம்புத்தூர் மாவட்டம் தொகு
- மேட்டுப்பாளையம்
- பொள்ளாச்சி
- வால்பாறை
- கருமத்தம்பட்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- காரமடை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- கூடலூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- மதுக்கரை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
திருப்பூர் மாவட்டம் தொகு
- காங்கேயம்
- வெள்ளக்கோயில்
- உடுமலைப்பேட்டை
- தாராபுரம்
- பல்லடம்
- திருமுருகன்பூண்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
கரூர் மாவட்டம் தொகு
- குளித்தலை
- புகளூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- பள்ளப்பட்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
அரியலூர் மாவட்டம் தொகு
பெரம்பலூர் மாவட்டம் தொகு
ஈரோடு மாவட்டம் தொகு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொகு
- மணப்பாறை
- துறையூர்
- துவாக்குடி
- இலால்குடி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
- முசிறி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
தஞ்சாவூர் மாவட்டம் தொகு
- பட்டுக்கோட்டை
- அதிராம்பட்டினம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
புதுக்கோட்டை மாவட்டம் தொகு
திருவாரூர் மாவட்டம் தொகு
நாகப்பட்டினம் மாவட்டம் தொகு
மயிலாடுதுறை மாவட்டம் தொகு
திண்டுக்கல் மாவட்டம் தொகு
தேனி மாவட்டம் தொகு
மதுரை மாவட்டம் தொகு
சிவகங்கை மாவட்டம் தொகு
இராமநாதபுரம் மாவட்டம் தொகு
விருதுநகர் மாவட்டம் தொகு
தூத்துக்குடி மாவட்டம் தொகு
- கோவில்பட்டி
- காயல்பட்டினம்
- திருச்செந்தூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
தென்காசி மாவட்டம் தொகு
- தென்காசி
- சங்கரன்கோவில்
- கடையநல்லூர்
- புளியங்குடி
- செங்கோட்டை
- சுரண்டை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
திருநெல்வேலி மாவட்டம் தொகு
- அம்பாசமுத்திரம்
- விக்கிரமசிங்கபுரம்
- களக்காடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
கன்னியாகுமரி மாவட்டம் தொகு
- குழித்துறை
- குளச்சல்
- பத்மனாபபுரம்
- கொல்லங்கோடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
2021-இல் உருவாக்கப்பட்ட புதிய நகராட்சிகள் தொகு
2021 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 30 பேரூராட்சிகளைக் கொண்டு, 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் நகராட்சியானது, கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து 16 அக்டோபர் 2021 அன்று கொல்லங்கோடு நகராட்சியும், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புகலூர் மற்றும் காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சி நிறுவப்பட்டது.
- 12 செப்டம்பர் 2021 அன்று 10 பேரூராட்சிகளைக் கொண்டு 9 புதிய நகராட்சிகளும்,[1] 16 அக்டோபர் 2021 அன்று 20 பேரூராட்சிகளைக் கொண்டு 19 புதிய நகராட்சிகளும் நிறுவப்பட்டது.[2]