பெருந்துறை

பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பெருந்துறை
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
பெருந்துறை
இருப்பிடம்: பெருந்துறை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E / 11.27; 77.58ஆள்கூறுகள்: 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E / 11.27; 77.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

24,930 (2011)

1,066/km2 (2,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

23.39 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi)

292 மீட்டர்கள் (958 ft)

இணையதளம் www.townpanchayat.in/perundurai

அமைவிடம்தொகு

பெருந்துறை பேரூராட்சிக்கு வடகிழக்கில் 18 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

23.39 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 மக்கள்தொகையும் கொண்டது. [5]

பொருளாதாரம்தொகு

இங்கு பனியன் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சிப்காட் தொழில் மையம் அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் அசோசியேசன் உள்ளது. பின்னலாடை தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பலவிதமான தொழில்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இங்கு மருத்துவக் கல்லுர்ரி இப்பேரூராட்சி அருகில் உள்ளது. மற்றும் கலை, அறிவியில் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி உள்ளதால் மாணவர்கள் அதிகம் தங்கி படிக்க வசதியாக உள்ளது. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்தொகு

1.பெருந்துறை முனியப்பசாமி கோயில் 2. கோட்டைமாரியம்மன் கோயில் 3. சோழீஸ்வரர் கோயில் 5. செல்லாண்டியம்மன் கோயில்

தொழில்வளம்தொகு

இங்கு தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா) 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.

கல்விதொகு

பள்ளிகள்தொகு

 • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 • கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி

கல்லூரிகள்தொகு

பயிற்சி மையங்கள்தொகு

 • ஜெயம் தனிப்பயிற்சி மையம்

பகுதிகள்தொகு

 • பெரியமடத்துப்பாளையம்,
 • ஆதிதிராவிடர் காலனி,
 • கோவை மெயின் ரோடு, *சின்னமடத்துப்பாளையம்,
 • பழையகோட்டை
 • அரிஜனகாலனி,
 • புதியகோட்டை அரிஜனகாலனி, *குழந்தையன்தோட்டம்,
 • ராஜவீதி,
 • பாவடி வீதி
 • பொடிமட்டைகாரர் சந்து,
 • மஜீத் வீதி, முகமதியர் தெரு
 • பஜனைகோயில் தெரு 1,
 • பஜனைகோயில் தெரு 2,
 • பஜனைகோயில் தெரு 3,
 • முதலியார் வீதி
 • குன்னத்தூர் ரோடு,
 • கள்ளியம்புதூர் ரோடு,
 • கள்ளியம்புதூர்,
 • கோவை மெயின் ரோடு,
 • எம் சி ரோடு கிழக்கு,
 • ஆதிதிராவிடர் காலனி,
 • ஆதிதிராவிடர் வீதி,
 • கவின் நகர், காந்தி நகர்,
 • ஆனந்த நகர்
 • தோப்புபாளையம்
 • பணிக்கம்பாளையம், *பணிக்கம்பாளையங்கிழக்கு *ஆதிதிராவிடர்காலனி, *பணிக்கம்பாளையம்மேற்கு *ஆதிதிராவிடர்காலனி,
 • முள்வாடியூர்,
 • காட்டூர்,
 • அரசங்குட்டைத்தோட்டம்,
 • தாளக்கரைபுதூர், *சின்னவேட்டுவபாளையம்,
 • சென்னிவலசு
 • பெரியவேட்டுவபாளையம்,
 • குமரன்தெரு,
 • பெரியவேட்டுவபாளையம்
 • நாடார் வீதி,
 • பெரியவேட்டுவபாளையம்
 • ஆதிதிராவிடர் காலனி
 • குட்டைக்காடு,
 • கடப்பமடை,
 • அலிச்சாகவுண்டன்புதூர்,
 • கருக்கன்காட்டூர்,
 • ஓலப்பாளையம்,
 • கந்தம்பாளையம்.
 • குள்ளம்பாளையம்.

சான்றுகள்தொகு

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்
 5. Perundurai Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்துறை&oldid=2828295" இருந்து மீள்விக்கப்பட்டது