கொங்கு பொறியியல் கல்லூரி
கொங்கு பொறியியல் கல்லூரி (Kongu Engineering College)
- இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சிப் பொறியியல் கல்லூரி ஆகும். [1] இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் அங்கீகரிக்கப்பட்டு, 'ஏ' தரம் பெற்றுள்ளது. [2]
குறிக்கோள் | Love, Knowledge and Service |
---|---|
நிறுவப்பட்டது | 1984 |
வகை | தன்னாட்சி |
கல்லூரி முதல்வர் | பாலுசாமி |
பட்டப்படிப்பு | 5,000 |
பட்ட மேற்படிப்பு | 150 |
அமைவு | ஈரோடு மாவட்டம், பெருந்துறை, தமிழ்நாடு, இந்தியா |
Academic term | அரைக் கல்வியாண்டு |
இணையதளம் | www |
படிப்புகள்
தொகுபி.இ. / பி.டெக்.-இல் 11 படிப்புகள் மற்றும் எம்.இ.-இல் 14 படிப்புகள் வழங்கப்படுகின்றன. [3]
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் பொறியியல்
- பி.இ. ஊர்திப் பொறியியல்
- பி.இ. எந்திர மின்னணுவியல் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல்
- பி.டெக். வேதிப் பொறியியல்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
- பி.டெக். உணவுத் தொழில்நுட்பம்
- பயன்பாட்டு அறிவியல் பிரிவில், மூன்று இளங்கலை மற்றும் நான்கு முதுகலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பயன்பாட்டுப் பாடங்கள்:
இளநிலை
தொகு- பி.எஸ்சி. மென்பொருள் பொறியியல்
- பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம்
- பி.எஸ்சி. கணினி தொழில்நுட்பம்
- பி.எஸ்சி. மென்பொருள் அமைப்புகள்
முதுநிலை
தொகு- முதுநிலை கணினி பயன்பாடு
- முதுநிலை வணிக நிர்வாகம்
இணை பாடத்திட்டங்கள் மற்றும் கற்றலின் ஒரு பகுதியாக சங்கங்கள், தொழில்முறை அமைப்புகள் போன்றவை மாணவர்களின் பங்கேற்புடன் நடத்தப்படுகின்றன. இவை ஆசிரியர்களின் கண்காணிப்புடன், மாணவர்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
வளாகம்
தொகுஇந்த நிறுவனமானது 150.25 ஏக்கர்கள் (60.80 ha) அளவிலான வளாகத்தில் அமைந்துள்ளது .
நூலகம்
தொகுஇந்தக் கல்லூரி நூலகமானது 1984 இல் நிறுவப்பட்டது. ஒரு வகுப்பறையில் தொடங்கப்பட்ட இது, பின்னர் ஒரு பெரிய கூடத்துக்கு இடம்பெயர்ந்து, தற்போது அதற்கென சொந்த கட்டிடத்தைக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தொகுஇக்கல்லூரியில் வேலை வாய்ப்புப் பிரிவானது 1998 இல் நிறுவப்பட்டது. இந்தப் பிரிவானது, இறுதி ஆண்டின் மாணவர்களை பணியில் சேர்ப்பதற்காக, நிறுவனங்களைக் கொண்டு வளாக நேர்காணல்களை ஏற்பாடு செய்கிறது; மேலும் மாணவர்களுக்கு, தொழில் துறையில் பயிற்சி அளிக்கிறது. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும், வளாக வேலை வாய்ப்புப் பயிற்சி (மனிதவள, தொழில்நுட்ப, ஜி.டி., எழுத்துத் தேர்வு) போன்றவை இறுதி ஆண்டுக்கு முன் வழங்கப்படுகிறன்றன. கொங்கு பொறியியல் கல்லூரி, அண்மையில், கோர்ஈஎல் டெக்னாலஜிசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; இது பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. [4]
விடுதி
தொகுகல்லூரியில் வளாகத்தில் விருந்தினர் மாளிகை, முன்னாள் மாணவர் விருந்தினர் மாளிகை, மாணவர்களுக்கான ஆறு விடுதிகள் மாணவிகளுக்கான ஐந்து விடுதி உள்ளன.
தரவரிசை
தொகு2018 ஆம் ஆண்டில், தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பால் (என்.ஐ.ஆர்.எஃப்.), கொங்கு பொறியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் 68 வது இடத்தைப் பிடித்தது.
குறிப்புகள்
தொகு- ↑ "Kongu Engineering College". www.kongu.ac.in. Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.
- ↑ "NAAC Accrreditation Report" (PDF). Archived from the original (PDF) on 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.
- ↑ "Kongu Engineering College". www.kongu.ac.in. Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.
- ↑ "Kongu Engineering College signs an MoU with CoreEL Technologies". CollegeSearch.in. Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இந்திய அரசின் கல்வி வழிகாட்டி பரணிடப்பட்டது 2017-07-03 at the வந்தவழி இயந்திரம்