முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாரமங்கலம்

தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.

தாரமங்கலம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் ஓமலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S.A ராமன், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,222 (2011)

3,109/km2 (8,052/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/tharamangalam

அமைவிடம்தொகு

தாரமங்கலம் பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 26 கிமீ; மேற்கே மேட்டூர் 22 கிமீ; வடக்கே மேச்சேரி 20 கிமீ; தெற்கே சங்ககிரி 29 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

9.72 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[5]

வெளி இணைப்புகள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Tharamangalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரமங்கலம்&oldid=2742158" இருந்து மீள்விக்கப்பட்டது