ஓமலூர்
ஓமலூர் (Omalur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின், ஓமலூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூரில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
ஓமலூர் | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 11°44′42″N 78°02′49″E / 11.745°N 78.047°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.16 km2 (3.15 sq mi) |
ஏற்றம் | 298 m (978 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,279 |
• அடர்த்தி | 2,000/km2 (5,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 636 455 |
தொலைபேசி குறியீடு | 04290 |
வாகனப் பதிவு | TN-30 |
இணையதளம் | www.townpanchayat.in/omalur |
அருள்மிகு ஓமலூர் கோட்டை ஈஸ்வரன் திருக்கோயில், அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ள பழைமையான
கோவில்களாகும்
அமைவிடம்
தொகுசேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த வானூர்தி நிலையம், சேலம், கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கு ஓமலூர் இரயில் நிலையம் உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 மக்கள்தொகையும், கொண்டது.[2]