முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஓமலூரில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,437 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 273 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. கோட்டகவுண்டம்பட்டி
 2. கோட்டமாரியம்மன்கோவில்
 3. எம்.செட்டிப்பட்டி
 4. பச்சணம்பட்டி
 5. பாகல்பட்டி
 6. செல்லப்பிள்ளைகுட்டை
 7. திண்டமங்கலம்
 8. தும்பிப்பாடி
 9. பெரியேரிப்பட்டி
 10. தொலசம்பட்டி
 11. யு. மாரமங்கலம்
 12. கொல்லப்பட்டி
 13. மூங்கில்பாடி
 14. நாராணம்பாளையம்
 15. எம். செட்டிபட்டி
 16. தேக்கம்பட்டி
 17. வெள்ளாளப்பட்டி
 18. மாங்குப்பை
 19. பல்பாக்கி
 20. எட்டிகுட்டபட்டி
 21. காமலாபுரம்
 22. கோட்டமேட்டுப்பட்டி
 23. முத்துநாயக்கன்பட்டி
 24. நல்லகவுண்டம்பட்டி
 25. பொட்டிபுரம்
 26. புளியம்பட்டி
 27. சாமிநாயக்கன்பட்டி
 28. சங்கீதப்பட்டி
 29. சிக்கனம்பட்டி
 30. தாத்தியம்பட்டி
 31. வெல்லக்கல்பட்டி
 32. செம்மண்கூடல்
 33. சிக்கம்பட்டி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு