ஓமலூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

(ஓமலூர் இரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓமலூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Omalur Junction railway station, நிலையக் குறியீடு:OML) இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தென்னக இரயில்வே துறையின், சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் தொடருந்து நிலையம் ஆகும். ஓமலூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்நிலையம் 15 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சேலம் இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள இரயில் நிலையம் ஆகும்.[1]

ஓமலூர் சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாநில நெடுஞ்சாலை 86, ஓமலூர், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°44′18″N 78°02′43″E / 11.7383°N 78.0452°E / 11.7383; 78.0452
ஏற்றம்278 மீட்டர்கள் (912 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக ரயில்வே
தடங்கள்சேலம் - பெங்களூரு முதன்மை வழித்தடம்
நடைமேடை2
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையில்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுOML
மண்டலம்(கள்) தென்னக ரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
அமைவிடம்
ஓமலூர் சந்திப்பு is located in தமிழ் நாடு
ஓமலூர் சந்திப்பு
ஓமலூர் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
ஓமலூர் சந்திப்பு is located in இந்தியா
ஓமலூர் சந்திப்பு
ஓமலூர் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இடம் மற்றும் அமைப்பு

தொகு

இந்த நிலையம் 2 நடைமேடைகளைக் கொண்டுள்ளது. மூன்றாவது நடைமேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இது இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது:

  1. சேலம் - பெங்களூரு பிரிவு
  2. சேலம் - மேட்டூர் அணை (வழி ஓமலூர்) 

ஓமலூர் - பெங்களூரு (ஓசூர் வழியாக) வழியை மின் இருப்புப் பாதையாக மாற்ற 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு