வாடகையுந்து

வாடகையுந்து அல்லது வாடகையூர்தி (ஆங்கிலத்தில் TAXICAB (அ) TAXI, CAB,) என்பது ஒற்றைப் பயணியோ அல்லது சிறுகுழுவோ தங்கள் விருப்பபடி பயணம் செய்ய ஒரு வாகனஒட்டியுடன் அமர்த்திக்கொள்ளும் ஒரு வகை வாகனம் ஆகும். வாடகையுந்து பயணிகளின் விருப்பத்தின்படி அவர் விரும்பும் இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் ஏனைய பொதுப் போக்குவரத்துகளில் பயண ஆரம்பிக்கும் இடம் மற்றும் சேருமிடம் பயணிகளால் அன்றி சேவை வழங்குனர்களாலேயே தீர்மானிக்கப்படும். மேலும் தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து மற்றும் பகிர்வு வாடகையுந்து (share taxi) ஆனது பேருந்து/டாக்சி எனப் பலவிதமான போக்குவரத்து முறைகளை வழங்குகிறது.

வாடகையுந்துவின் மேலுள்ள ஒளிரும் சுட்டி
இந்தியாவின் மேங்கோ ஆரஞ்சு கிராமத்தில் தானி
கொல்கத்தாவில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வாடகையுந்து
மும்பையிலுள்ள ரீட்ரோ பிரீமியர் பத்மினி வாடகையுந்து
சிங்கப்பூரிலுள்ள ஹீண்டாய் i40 வாடகையுந்து

சொற்பிறப்பியல் தொகு

மார்ச் 9 1898ல் பாரிசில் முதன்முதலாக வாடகை அளவீடுமானி பொருத்தப்பட்ட டாக்சிகேப்கள் அறிமுகமாயின, அவை டாக்சாமீட்டர்கள் (taxamètres) என்றழைக்கப்பட்டன, பின்பு அக்டோபர் 17 1904, அவை டாக்சிமீட்டர்கள் (taximètres) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.[1]

ஹாரி நதானியேல் ஆலன் என்பவருடைய நியூயார்க் நகரம் டாக்சிகேப் நிறுவனம், 1907ல் பிரான்சிலிருந்து எரிவாயுவினால் இயங்கும் 600 டாக்சிகேப்களை இறக்குமதி செய்தது. அப்பொழுது "taximeter cabriolet"(டாக்சிமீட்டர் காப்ரியோலட்) என்ற வார்த்தையானது "taxicab" (டாக்சிகாப்) எனச் சுருக்கப்பட்டது.

டாக்சிமீட்டர் என்பது பிரெஞ்சு வார்த்தையான "taximètre" என்பதின் தழுவலாகும். முதல்பகுதியான டாக்சி, மத்தியகால லத்தீன் வார்த்தையான "taxa" விலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் வரி அல்லது கட்டணம் ஆகும். இதனுடன் அளவீடுதல் எனப்பொருள் தரும் கிரேக்க வார்த்தையான metron (μέτρον) என்பதிலிருந்து மீட்டர் என்ற வார்த்தைப் பெறப்பட்டு சேர்க்கப்பட்டது.

காப்ரியோலட் என்பது, குதிரையால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டியாகும், இது தாண்டு (leap), துள்ளு (caper) எனப்பொருள் தரும் பிரெஞ்சு வார்த்தையான "காப்ரியோலர் (cabrioler)", குதிக்க(to jumb) எனப் பொருள்படும் இத்தாலி வார்த்தையான "capriolare", காட்டு ஆடு(wild goat), ஆண் மான்(roebuck) எனப்பொருளப்டும் லத்தீன் வார்த்தையான "capreolus" என்பதிலிருந்தும் பெறப்பட்டது. [2]

சான்றுகள் தொகு

  1. Fierro, Alfred, Histoire et Dictionnaire de Paris (1996), Robert Laffont, page 1166, ISBN 2-221-07862-4
  2. "taximeter" (Fourth ed.). The American Heritage Dictionary of the English Language (Bartleby). 2000. Archived from the original on 12 ஜூலை 2001. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடகையுந்து&oldid=3839265" இலிருந்து மீள்விக்கப்பட்டது