செங்கம்

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

செங்கம் (ஆங்கிலம்:Chengam) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், செங்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப்பேரூராட்சியும் ஆகும். இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

செங்கம்
CHENGAM
அடைபெயர்(கள்): திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள நகரம்
செங்கம் is located in தமிழ் நாடு
செங்கம்
செங்கம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
செங்கம் is located in இந்தியா
செங்கம்
செங்கம்
செங்கம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°18′15″N 78°47′33″E / 12.304061°N 78.792451°E / 12.304061; 78.792451
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்திருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதிசெங்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைமூன்றாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்செங்கம் நகராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
 • மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்54,278
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
வாகனப் பதிவுTN 25
ஊராட்சி ஒன்றியம்செங்கம்
சென்னையிலிருந்து தொலைவு229 கி.மீ.
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு33 கி.மீ.
புதுச்சேரியிலிருந்து தொலைவு139 கி.மீ.
ஆரணியிலிருந்து தொலைவு75 கி.மீ
திருப்பத்தூரிலிருந்து தொலைவு52 கி.மீ.
வேலூரிலிருந்து தொலைவு99 கி.மீ.
பெங்களூரிலிருந்து தொலைவு171 கி.மீ.
இணையதளம்செங்கம்

வரலாறு

தொகு

சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டில் இடம்பெற்ற மலைபடுகடாம் என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது சவ்வாது மலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[2]

அமைவிடம்

தொகு

புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்த செங்கம் நகராட்சி, திருவண்ணாமலையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் வடக்கே போளூர் 49 கி.மீ. மற்றும் ஆரணி 75 கி.மீ. தொலைவிலும், மேற்கே திருப்பத்தூர் 52 கி.மீ. தொலைவிலும், சாத்தனூர் அணையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்து 81 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

போக்குவரத்து

தொகு

சாலை வசதிகள்

தொகு

செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.

பேருந்து வசதிகள்

தொகு

செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வழி சேரும் இடம்
புதுப்பாளையம் மார்க்கமாக போளூர், ஆரணி, வேலூர், சென்னை, ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம் செல்லும் பேருந்துகள்
திருவண்ணாமலை மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, மேல்மருவத்தூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருக்கோவிலூர், பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தாம்பரம், அடையாறு, விருத்தாசலம், திட்டக்குடி செல்லும் பேருந்துகள்
ஊத்தங்கரை வழியாக தருமபுரி, அரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், உதகமண்டலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, ஒகேனக்கல் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
சிங்காரப்பேட்டை மார்க்கமாக திருப்பத்தூர், ஆம்பூர் செல்லும் பேருந்துகள்
தண்டராம்பட்டு மார்க்கம் தண்டராம்பட்டு, தானிப்பாடி செல்லும் பேருந்துகள்

நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு

8 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

சட்டமன்றத் தொகுதி

தொகு

வருவாய் வட்டம்

தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செங்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 121 வருவாய் கிராமங்களும் மற்றும் 2,80,581 மக்கள்தொகை கொண்டது. இந்த வட்டத்தில் செங்கம் நகராட்சி மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 54278 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

Linguistic census
Linguistic groups Percent(%)
தமிழ்
87.64%
உருது
7.79%
தெலுங்கு
4.01%
கிரேக்கம்
0.4%
மலையாளம்
0.13%
இதர
0.01%
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19013,867—    
19216,305+63.0%
19319,457+50.0%
194111,678+23.5%
195114,912+27.7%
196117,441+17.0%
198123,462+34.5%
199131,196+33.0%
200141,037+31.5%
201154,278+32.3%
Sources:

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது

கோவில்கள்

தொகு

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது.[8] இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.

 

செங்கம் நகரில் செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது. பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது. விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மற்றும் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும். ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும். பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது. மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. செங்கம் பற்றிய வரலாறு
  3. செங்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Chengam Population Census 2011
  5. "Population Details". Tiruvannamalai municipality. 2011. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  6. "Census Info 2011 Final population totals – Salem(05740)". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  7. "Chengam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. https://temple.dinamalar.com/New.php?id=1037
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கம்&oldid=3930150" இலிருந்து மீள்விக்கப்பட்டது