ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)

பட்டு மற்றும் அரிசி ஆலைகளுக்கு புகழ்ப்பெற்ற நகரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரி

ஆரணி (ஆங்கிலம்: Arani) தென் இந்தியா மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த நகராட்சியும் மற்றும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட வட மாவட்டத்தின் ஒரு பகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது. இந்த ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆரணி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 22.03.2021 ஆம் தேதி நடந்த தேர்தல் பரப்புரையில் அப்போதைய முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி க. பழனிசாமி அவர்கள் ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.[2]

ஆரணி
ஆரண்யம்
பட்டு நகரம்
ஆரணி பட்டு நெசவு
,
ஆரணியில் உள்ள நெல் வயல்
ஆரணியில் அமைந்துள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம்
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் அரிசி நகரம், இந்தியாவின் பட்டு நகரம்
ஆரணி is located in தமிழ் நாடு
ஆரணி
ஆரணி
ஆரணி, தமிழ்நாடு
ஆரணி is located in இந்தியா
ஆரணி
ஆரணி
ஆரணி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°40′17″N 79°16′54″E / 12.671300°N 79.281800°E / 12.671300; 79.281800
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்
தோற்றுவித்தவர் தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்ஆரணி நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.எஸ்.தரணிவேந்தன்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சேவூர்.இராமச்சந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு.முருகேஷ் இ.ஆ.ப
 • சார் ஆட்சியர்திருமதி.தனலட்சுமி இ.ஆ.ப.
 • நகராட்சி தலைவர்திரு.ஏ.சி.மணி
பரப்பளவு
 • தேர்வு நிலை நகராட்சி35.64 km2 (13.76 sq mi)
 • பரப்பளவு தரவரிசை151 மீட்டர்கள்
ஏற்றம்
171 m (561 ft)
மக்கள்தொகை
 (2011)
 • தேர்வு நிலை நகராட்சி92,375
 • தரவரிசை39
 • நகர்ப்புறம்
1,19,574
 • நாட்டுப்புறம்
1,75,402
இனம்தமிழர்கள்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
632 301, 632 314,
632 316, 632 317,
632 318
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04173
வாகனப் பதிவுTN-97
சென்னையிலிருந்து தொலைவு141 கி.மீ (88 மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு62 கி.மீ (40 மைல்)
வேலூரிலிருந்து தொலைவு36 கி.மீ (24 மைல்)
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு62 கி.மீ (40 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு92 கி.மீ (58 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு120 கிமீ (75 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு241 கிமீ (150 மைல்)
இணையதளம்ஆரணி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக நெசவு தொழில் பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம், எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் ஆலயம், அருள்மிகு பச்சையம்மன் ஆலயம், பெரியநாயகி அம்மன் ஆலயம், ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம், அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு கோவில்கள் உள்ளதாக கருதப்படுகிறது. ஆரணி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஆரணி நகரம் உருவாக்கம்

தொகு

ஆரணி நகராட்சி

தொகு
  • ஆரணி 1951 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.
  • (அரசாணை:564) 2.04.1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • (அரசாணை: 851) 9.05.1983 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
  • (அரசாணை:1054) 4.04.2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஆரணி,தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறந்த தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக வரும் மற்றும் நகராட்சியாக உருவாக்கப்பட்டு 72 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து ஆரணி நகராட்சி சாதனை படைத்து வருகிறது. ஆரணி நகரை இந்த நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்துகிறது. ஆரணி நகராட்சியானது ஆண்டு வருமானம் 12 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டித்தருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மூலமாக அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக உள்ளது.
  • ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உள்ளார். நகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம், பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்குப் பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் ஆட்சித்துறைத் தலைவரான நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்கள் 33 பேர் கொண்ட அமைப்பு சட்டமியற்றும் பணியை மேற்கொள்கிறது.
  • தமிழ்நாடு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான உட்பிரிவு மூலமாக நகரின் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் ஓர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றும் அடங்கும். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப்பதிவேடுகள் பிரிவு முதலிய சிறப்புப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°40′N 79°17′E / 12.67°N 79.28°E / 12.67; 79.28 ஆகும்.[11] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஆரணி (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
9.3
(48.7)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[12]

அமைவிடம்

தொகு

ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆரணி சென்னைக்கு 142 கி.மீ. மற்றும் காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், வேலூர் 39 கி.மீ. மற்றும் இராணிப்பேட்டைக்கு 32 கிமீ தெற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் உள்ளது. மேலும் ஆரணி நகரானது விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென் மாவட்டங்களையும், வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களையும், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பு முனையாகவும் விளங்குகிறது.அதுமட்டுமின்றி, வந்தவாசி, திண்டிவனம், வேலூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு செல்ல ஒரு மணி நேர பயணம் ஆகும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து ஆரணி நகராட்சியின் மக்கள் தொகை 92,375. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 1,19,574.[13]

Linguistic census
Linguistic groups Percent(%)
தமிழ்
71.57%
தெலுங்கு
13.07%
உருது
12.39%
கன்னடம்
1.01%
மலையாளம்
0.4%
இதர மொழி
0.51%


 

ஆரணியின் சமயங்கள் (2011)

  இந்து (89.16%)
  சைனம் (0.19%)
  மற்றவை (0.19%)

ஆறு வயதுக்கு  கீழ் 6,346 பேரும் அவர்களில் 3,200 ஆண்களும்  மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம்  76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில்  23,298 தொழிலாளர்களில், 153  பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள்.[14] என உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, ஆரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% இந்துக்கள், 7.39% முஸ்லிம்கள், 1.8% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.01% புத்த மதத்தினர், 1.43% சமணர்கள், 0.19% ஆவர்.[15]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19019,299—    
191113,394+44.0%
192114,286+6.7%
193117,446+22.1%
194119,668+12.7%
195124,567+24.9%
196131,351+27.6%
198138,668+23.3%
199154,881+41.9%
200160,888+10.9%
201192,375+51.7%
Sources:

[1]

சொற்பிறப்பியல்

தொகு

பழங்காலத்தில் ஆரணி, ஆரண்யம் என அழைக்கபட்டது; ஏனெனில் இந்தப் பெயர் சமஸ்கிருதம் மொழியிலிருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆர் என்பது அத்தி மரம்; முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரங்கள் இருந்துள்ளன. மேலும், இந்த இடத்தில் கமண்டல நாகநதி ஆறு ஓடுகிறது. நதியும் மரமும் ஆபரணங்களாக உள்ளதால், முறையே (ஆர்+அணி) ஆரணி என்றும், (ஆறு+அணி) ஆறணி என்றறுமாகி, பின் மருவி ஆரணி என இறுதியாகப் பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

தொகு
ஆரணி வரலாறு
600 —
800 —
1000 —
1200 —
1400 —
1600 —
1800 —
2000 —
பல்லவர்கள்
ராஷ்ரகூடர்கள்
சோழர்கள்
விஜயநகரப்பேரரசு
சம்புவராயர்கள்
வீர சிவாஜி
ஜாகீர் ஆட்சி
ஜாகீர்-பிரித்தானிய
ஆரணியை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, தோராயமாக கால அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் முக்கிய நகராக விளங்கியது. ஆரணி நகரம் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் வருகின்றன. பொ.ஊ. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது. கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கிய காலத்தில், ஆரணி ஒரு முக்கிய வணிகத் தலமாக விளங்கியது. பல்லவர்களைத் தொடர்ந்து, ராஷ்ரகூடர்கள் ஆட்சியைத் தொடர்ந்து, சோழர்களின் பிடியில் சிக்கியது. சோழர்கள் ஆரணியை 300 வருடங்கள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களின் வாரிசுகளான விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழ அரசர்கள் இந்த நகரத்தை ஆண்டனர்.[சான்று தேவை].

சோழர்களை தொடர்ந்து விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணியை அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகரப் பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுதக் கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்திருந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரணியில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த போது தசரா விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சியின் போது விஜயநகர கூட்டரசு தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள், படைவீட்டைத் தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவர்களின் ஆட்சிப்பகுதி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வரை பரவியிருந்தது. குறுகிய காலமே இவர்கள் ஆட்சி செய்திருந்தாலும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றனர். இவர்கள் ஆண்ட பகுதியான படைவீட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கோட்டைகள், கோயில்கள், நாணயங்கள், நகை ஆபரணங்கள் ஆகியன கிடைத்துள்ளன. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி, படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்தது.

விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே பொ.ஊ. 1760ல் நடந்த கர்நாடகப் போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. இந்தப் போர் இரண்டாம் கர்நாடகப் போர் அல்லது ஆரணி சண்டை என்று அழைக்கப்படுகிறது.[18]

1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார். அங்கு அவர் கூடப்ஷாகீப்பை சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து) மற்ற வெற்றிகளைப் பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாகீ மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாகீப் அவனது பணம், குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றைப் பெற்ற சிவாஜியின் படை, 1677இல் மார்ஷல் கர்னல் தலைமையில், கடப்பா, மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கிப் படையெடுத்தது.

செஞ்சி, வேலூரை வெற்றிகொண்டபிறகு தஞ்சையையும் கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதைக் கொடுக்க அவன் தயாராக இல்லை. சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் உத்தரவை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவனின் சேவைக்கு விருதாக ஆரணி நகரைப் பரிசாக அளித்தான் வீர சிவாஜி. அதன் பிறகு ஆரணியை ஆட்சி செய்து ஆரணியின் ஜாகிர் என்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் வாரிசுகள் ஆரணியை 1601 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.[19]

நடுக்காட்டில் அரண்மணை

தொகு

ஆரணியிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குப் புறமாக சென்றால் பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் அதாவது ஆரணியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இது ஒரு ஜாகீர் காலத்து அரண்மனை ஆகும். ஐந்தாவது ஜாகீர் திருமலை சாகிப் அங்கு அவரது காதலிக்காக கட்டிய அரண்மனை பங்களா இங்கு அமைந்துள்ளது. இவர் ஓர் ஆங்கிலேய பெண்ணின் மீது கொண்ட காதலால் தனி பங்களாவைக் கட்டி அங்கு வாழ்ந்து வந்தார். இந்த சத்திய விஜயநகரில், அழகிய செந்நிற செங்கற்களால் ஆன ஓர் அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியைப் பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரைப் பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையைப் பார்த்து பிரமித்து, 'அதேபோல ஓர் அரண்மனையைக் கட்டி அதில் என்னை வாழ வையுங்கள்' என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் எனுமிடத்தில் தனித்த நடுக்காட்டில் முதல் மனைவிக்குக் கட்டிய அரண்மனையைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்குச் செல்ல மூன்று இடங்களில் படிகள், அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரத்தில் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை (அதன் வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக) அதில் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.[20]

பிரஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது பூசிமலைக்குப்பம் காட்டில் தனித்து நிற்கிறது. பிரெஞ்சு கட்டிடக்கலை என்றால் என்னால் ஒரு தொழில்முறை கருத்தைப் பெற முடியவில்லை, இருப்பினும் இது பல பிரெஞ்சு கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருக்கலாம்.[21] இந்த அரண்மனை பூசிமலைக்குப்பம் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் மற்றும் பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படும் ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதற்கான சான்றுகளும் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும்.[22]

ஆரணி கோட்டை

தொகு

அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது.

தற்போது, அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன.[23]

பின்னாட்களில் வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது ஆரணி தாலுகாவின் தலைநகராகப் பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஜமீன்தார் ஒழிப்பு 1948 ல் நிறைவேற்றப்பட்டும் வரை ஜாகிர் பாஸ்கர் பந்த் வழிவந்தோரால் தலைமையில் ஆரணி நகரம் ஆட்சி தொடர்ந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக மாறியது. அதன் பின்னர் வட ஆற்காடு மாவட்டம் தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட மறுசீரமைப்புக்கு உட்பட்டது. அதன்படி வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் என இரண்டாக 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த ஆரணி பகுதி திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

தசரத மன்னனின் புத்திர காமேஷ்டி யாகம்

தொகு

பேரரசன் தசரத மன்னன் தனது ஆட்சிக்குப் பிறகு, தனது குடிமக்களை பாதுகாத்து ஆட்சி செய்ய தனக்கு எந்த வாரிசும் இல்லையே என்ற கவலையில் இருந்தார். அவர், தனது குல குருவான வஷிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி கமண்டல நாகநதி கரைக்குச் சென்று, அங்கு சிவாலயம் நிறுவப்பட்டு, மஹரிஷி ரிஷ்யசிருங்காவின் தலைமையில் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டது. அதன் பலனாக அவருக்கு நான்கு அழகான வீரமிக்க மகன்களாக இராமர், லஷ்மணன், பரதன் மற்றும் சத்ருக்கன் ஆகியோர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த கோவில் கமண்டல நாகநதி கரையில் புத்திர காமேஷ்ட்டீஷ்வரர் ஆலயத்தின் வரலாறாகவும் மற்றும் ஆரணி நகரின் வரலாறாகவும் கருதப்படுகிறது. [சான்று தேவை]

காந்தியடிகள் வருகை

தொகு

1927 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி கதர் பிரச்சாரத்திற்க்காக காந்தியடிகள் ஆரணிக்கு வருகை புரிந்தார். அப்போது ஆரணியில் தங்கி பரசுராம நாயக்கர் அரிசி ஆலையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பரசுராம நாயக்கர் அவர்களின் மனைவி காந்தியடிகளை வெள்ளித்தட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அதே நாள் மாலையில் ஆரணி கோட்டை மைதானத்தில் கலந்து கொண்டு கதர் ஆடைகளை உடுத்தும் படி பேசினார். அதை தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி மீண்டும் 2வது முறையாக ஆரணிக்கு வந்தார்.[24]

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
நகராட்சி அதிகாரிகள்
தலைவர் திரு.ஏ.சி மணி [25]
துணை தலைவர் திரு.பாரி பாபு [26]
நகராட்சி ஆணையர் திருமதி.தமிழ்ச்செல்வி[27]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.சேவூர். இராமச்சந்திரன்[28]
ஆரணி மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்[29]

ஆரணி நகராட்சியானது ஆரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

ஆரணி (சட்டமன்றத் தொகுதி)யானது 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது. இந்த ஆரணி (சட்டமன்றத் தொகுதி)யில் 2,63,318 வாக்காளர்கள் உள்ளனர். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திரு. சேவூர் ராமச்சந்திரன் வென்றார்.

 
ஆரணி மக்களவைத் தொகுதியின் வரைபடம்

2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் படி, ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் மொத்தம் 14,45,751 வாக்காளர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கழகத்தை (காங்கிரசு) சேர்ந்த எம்.கே.விஷ்ணுபிரசாத் வென்றார்.

பொருளாதாரம்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆரணி நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். ஆரணி வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, நெசவு தொழில் பட்டுப்புடவை உற்பத்தி, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ஆரணி பட்டு புடவைகளுக்கு புவிசார் குறியீடு மற்றும் தேசிய விருது பெற்றும் ஆரணி நகரில் பட்டு பூங்கா அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பட்டு பூங்கா அமைத்தால் ஆரணி பட்டுப் புடவை அதிகப்படியான வருவாய் ஈட்டும் நகரமாக வளரும்.[30] ஆரணியில் பட்டுச்சேலை மற்றும் அரிசிக்கு மிகவும் பெயர் பெற்றது.

ஆரணிப்பட்டு

தொகு

இந்த தொழில் அதிக அளவில் ஆரணி மற்றும் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் தழைத்தோங்கியது. வடமாதிமங்கலம் மற்றும் தேவிகாபுரம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் தறி நெசவு செய்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆரணியில் பட்டு நெசவு விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கி ஜாகீர் ஆட்சி காலத்திலும் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும் வளர்ச்சி அடைந்தது. தம்பன்ன செட்டியார் என்பவர் அமைத்த பட்டு முறுக்காலையே முதல் ஆலையாகக் கருதப்படுகிறது. பின்னர் அச்சுக்கட்டும் தொழிலை கண்ணையா நாயுடு என்பவரும், பல வண்ணங்களில் சாயமிடும் முறையை வி.விஜயராகவா நாயுடு என்பவரும் கொண்டு வந்தனர். பின்னர் படிப்படியாக பட்டு உற்பத்தி நெசவாளர்களும், பட்டு உற்பத்தி விற்பனையாளர்களும் பெருகினர்.

நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள்உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும். ஆரணி சேலை(Arani sarees) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்[1]. இந்த சேலைகள் ஆரணியில் உருவாக்கப்படுவதால், ஆரணியை ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY) எனவும் அழைப்பர்.

சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்[2]. சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3]தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளன.[31].காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. ஆரணி சேலை உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி, பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடுபெற்றுள்ளது.[4].

இந்தியா சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் 75 வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணி பட்டு புவிசார் குறியீடு பெற்றிருந்ததால் சிறப்பு அஞ்சல் மாதிரி உறைகள் அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டார்.[32].[33]

ஆரணி மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப ஆரணி பட்டுப் புடவைகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மத்திய அரசால் ஆரணியில் பட்டு ஜவுளிப்பூங்கா அமைக்க உத்தரவிட்டது.[34][35][36][37]

ஆரணி பட்டுக் கைத்தறி குழுமம்

தொகு

தமிழகத்தில் அசல் வெள்ளி ஜரிகை இழைகளை பயன்படுத்தி நெசவு செய்யும் கைத்தறி பட்டுச் சேலை குழுமங்களிலியே மிகப்பெரிய குழுமமாக ஆரணி இயங்கி வருகிறது. 35000க்கும் மேற்பட்ட பாரம்பரியமான நெசவு கலைஞர்களைக் கொண்டு ஆரணி இயங்கி வருகிறது [38]

கலைஞர் கருணாநிதி கைத்தறி பட்டுப் பூங்கா

தொகு

கடந்த 11 ஆம் தேதி ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழ்நாட்டின் பட்டு ரகங்களில் ஆரணி பட்டுக்கென பிரத்யேக சிறப்பியல்புகள் உள்ளன. ஆரணி, ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆரணிப் பட்டுநெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

இருப்பினும், நகரமயமாக்கல் மற்றும் மாசடைவதால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக இப்பகுதியில் நெசவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

எனவே, நெசவுக்கு முந்தைய,பிந்தைய பணிகளை மேற்கொள்ளவும் கண்கவர் வடிவமைப்புகளில் கைத்தறி ரகங்களைஉற்பத்தி செய்யவும் ஆரணிக்கு அருகில் உள்ள பெரியண்ணநல்லூரில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

இப்பூங்காவில் நெசவுக்கூடம், சாயச்சாலை, பூஜ்ஜிய நிலை கழிவுநீர் வெளியேற்றம் வசதியுடன்கூடிய பொது சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வடிவமைப்பு மையம், நெசவுப் பயிற்சி, விற்பனையகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம்சுமார் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பதனீட்டாளர்கள் பயன்பெறுவர்.[39]

ஆரணி அரிசி

தொகு
 
ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல்

ஆரணி நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும். இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தான் முதல் நகரம் ஆகும்.[40].ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்திய[1]நாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும்.[2] இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்குச் செல்கிறது.[3] இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகின்றன.

ஆரணி பகுதியில் விளையும் நெல்லுக்கு நீராதாரமாக விளங்குவது செய்யாறு ஆறும், கமண்டல நாகநதி ஆறும் ஆகும். இவ்விரு நதிகளும் ஜவ்வாது மலையில் உற்பத்தி ஆகி ஆரணி அருகே செல்கின்றன. இந்த ஆற்றுப்படுகையில் விளைவிக்கப்படும் நெல்லுக்கு கிடைக்கும் நீர் ஜவ்வாது மலையிலுள்ள காடுகளிலும், கனிமவளங்களிலிருந்தும் நுண் ஊட்டச் சத்துகள் கொண்டு வருவதும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பகுதியில் கிடைக்கும் நன்னீரில் அரிசி வேகவைக்கப்படுவதால் தமிழகத்தில் எங்கிருந்து நெல்லைப் பெற்றாலும் சுவை கூடி விடுகிறது என்பது தான் ஆரணி அரிசியின் சிறப்பு. எனவேதான் சென்னை போன்ற பெருநகரங்களில் எங்கு கிடைக்கும் ஆரணி அரிசி என்று விளம்பரப்படுத்துகின்றன.[41]

கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசி முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசியானது தஞ்சாவூர் அரிசியைப் பின் தள்ளியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது. அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[42]

போக்குவரத்து

தொகு

ஆரணி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.

சாலை வசதிகள்

தொகு

பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி‌ நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்இராணிப்பேட்டை சாலையின் மூலம் ஆற்காடு, சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் சேத்துப்பட்டு, செஞ்சி, விழுப்புரம் மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை எண்-4 ஆரணி வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்-132 மூலம் வேலூர், திருப்பதி, சித்தூர், திருப்பத்தூர், பெங்களூர் மற்றும் வந்தவாசி, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்- 237A மூலம் போளூர், செங்கம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருக்கோவிலூர், திருச்சி,கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. அதேபோல் மாநில நெடுஞ்சாலை 5A ன் மூலம் செய்யார், காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை எண் புறப்படும் இடம் சேருமிடம் வழி
NH 132 ஆரணி வேலூர் கண்ணமங்கலம்
SH 4 இராணிப்பேட்டை விழுப்புரம் ஆற்காடு, ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி, விழுப்புரம்
SH 5A ஆரணி காஞ்சிபுரம் செய்யாறு
SH 237 (சேலம் - சென்னை) இணைக்கும் மாற்றுவழி சாலை செங்கம் ஆரணி புதுப்பாளையம், போளூர், களம்பூர்
SH 239 ஆரணி படவேடு சந்தவாசல்
SH 240 ஆரணி திண்டிவனம் பெரணமல்லூர், வந்தவாசி, தெள்ளாறு
மாவட்ட சாலை MH40 ஆரணி தேவிகாபுரம் தச்சூர்
மாவட்ட சாலை ஆரணி தேசூர் பெரணமல்லூர், இஞ்சிமேடு, மழையூர்
மாவட்ட சாலை ஆரணி விளாப்பாக்கம் சேவூர், ஆரணி அரண்மனை
மாவட்ட சாலை ஆரணி வாழைப்பந்தல் முனுகப்பட்டு

ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன.ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை, காஞ்சிபுரம் சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.

பேருந்து வசதிகள்

தொகு

தமிழ்நாட்டின் முதல் பேருந்து சேவை ஆரணி முதல் சென்னை வரை முதல் பேருந்து சேவைத் தடம், 1967 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது.

ஆரணியில் இருந்து சென்னைக்கு 50 க்கும் அதிகமான பேருந்துகளும், பெங்களூரு நகருக்கு 10 பேருந்துகளும், கோயம்புத்தூர், திருப்பூர் நகருக்கு 2 பேருந்துகளும், சேலம் நகருக்கு 15 பேருந்துகளும், புதுச்சேரி நகருக்கு 7 பேருந்துகளும், திருச்சி, திருப்பதி, மதுரை நகரங்களுக்கு 3 பேருந்து வீதம் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர்ப் பகுதிகளை இணைக்க 32 பேருந்துகள் ஆரணி நகரப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஆரணி வழியாக நாளொன்றுக்கு 425 அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இங்கிருந்து சென்னை செல்வதற்கு மூன்று பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன. ஆற்காடு, பூவிருந்தவல்லி வழியாகவும், வந்தவாசி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகவும் மற்றும் செய்யார், காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பை, தாம்பரம் ஆகிய வழித்தடங்கள் ஆகும். இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது.

ஆரணியில் புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.

 

ஆரணி பழையப் பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையம் ஆரணி நகராட்சியில் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகும். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்குப் புறமாகச் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. தினமும் 20,000க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். மேலும் 30,000க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தைக் கடந்து செல்கின்றனர்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்
நடைமேடை வழி சேருமிடம்
1 , 2 சென்னை
3, 4 வேலூர் மார்க்கமாக
5 ஆற்காடு மார்க்கமாக
6, 7 செய்யாறு மார்க்கமாக
8, 9 கலவை மார்க்கமாக
10 கண்ணமங்கலம் மார்க்கமாக

கண்ணமங்கலம், படவேடு, சமுனாமரத்தூர், அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப் பேருந்துகள்

11 சேவூர் மார்க்கமாக

பூசிமலைக்குப்பம், ஆரணி அரண்மனை, முள்ளண்டிரம், விளாப்பாக்கம் செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

ஆரணி புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
1, 2, 3 போளூர் மார்க்கமாக

போளூர், திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், ஈரோடு, ஒகேனக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, திருக்கோவிலூர், திருச்சி, சிதம்பரம், மேட்டூர், சமுனாமரத்தூர், வில்வாரணி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்

4, 5, 6 சேத்துப்பட்டு மார்க்கமாக

சேத்துப்பட்டு, செஞ்சி விழுப்புரம், புதுச்சேரி, விருத்தாசலம், திட்டக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, வேட்டவலம், மேல்மலையனூர், நெய்வேலி, கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, நன்னிலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, மதுரை, செல்லும் அரசு விரைவுப்பேருந்துகள்

7, 8 வந்தவாசி மார்க்கமாக

வந்தவாசி, மேல்மருவத்தூர், மரக்காணம், திண்டிவனம், புதுச்சேரி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், மற்றும் மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள்

9 பெரணமல்லூர் மார்க்கமாக

பெரணமல்லூர், தேசூர், ரெட்டிக்குப்பம், இஞ்சிமேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

10 சந்தவாசல் மார்க்கமாக

படவேடு, செண்பகத் தோப்பு அணை செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

11 வாழைப்பந்தல் மார்க்கமாக

வாழைப்பந்தல், பச்சையம்மன் கோவில், செய்யாறு, காஞ்சிபுரம் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப் பேருந்துகள்

12 தேவிகாபுரம் மார்க்கமாக

தேவிகாபுரம், அவலூர்பேட்டை, போளூர் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

13 களம்பூர் மார்க்கமாக படவேடு, விளாங்குப்பம், துரிஞ்சிகுப்பம், ஆத்துவாம்பாடி, பாலம்பாக்கம் செல்லும் மற்றும் நகரப் பேருந்துகள்

ஆரணி புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்: இந்தப் பேருந்து நிலையம் ஆரணி நகராட்சியில் தெற்குப் புறமாக அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்திலியே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு முழுவதும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். இங்கிருந்து தமிழ்நாட்டின் குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இருக்கும். தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் பேருந்து நிலையம் நிரம்பி வழியும், காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையங்களில் பயணம் செய்கின்றனர்.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்

தொகு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருப்பதி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், சித்தூர், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய தொலைதூர நகரங்களுக்கு SETC பேருந்து சேவைகள் மூலம் இயக்கப்படுகின்றன.

இரயில் போக்குவரத்து வசதிகள்

தொகு
 
ஆரணி சாலை தொடருந்து நிலையம்

ஆரணி வழியாக இரயில் பாதை கள் இணைக்க விழுப்புரம்- காட்பாடி தொடருந்து பாதை ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய இரயில் நிலையம், (தனியார் பேருந்து நல முதலாளிகள், நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றதால்) ஆரணிதிருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூர் எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆரணி நகரத்திற்கு இரயில் நிலையம் ஏதும் இல்லை. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற நகரத்திற்கு 8 கி.மீ. தொலைவில் இரயில் நிலையம் அமைக்கப்பட்டு அந்த இரயில் நிலையத்திற்கு ஆரணி சாலை தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையத்திலிருந்து ஆரணிக்குச் சுலபமாக செல்ல வழி வகுக்கும்.திருவண்ணாமலை நகரம் மற்றும் சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் , மாவட்டத்தின் மூன்றாவது பெரிய இரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது.

இங்கிருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர், வேலூர் - காட்பாடி, கொல்கத்தா, ஹௌரா, திருப்பதி, கடலூர், பாண்டிச்சேரி, மன்னார்குடி, மாயவரம், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சென்னை சென்ட்ரல், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய ஊர்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன.[43]

அதுமட்டுமின்றி, ஆரணி நகரின் வழியாக இரயில்கள் செல்ல திண்டிவனம் - நகரி இரயில் பாதை திட்டம் அமைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.[44]

விமானப் போக்குவரத்து

தொகு

ஆரணியில் விமான நிலையம் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள விமான நிலையங்கள் மூலம் ஆரணி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள்

தொகு
  • அருள்மிகு கைலாசநாதர் ஆலயம், ஆரணி[45]
  • திருமலை சமணர் கோயில் ஆலயம், திருமலை, ஆரணி
  • அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயம், படவேடு, ஆரணி[46]
  • புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம், ஆரணி[47]
  • அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம், தேவிகாபுரம் ஆரணி வட்டம்[48]
  • எந்திர வடிவில் சனீஸ்வரபகவான் ஆலயம், ஏரிக்குப்பம் ஆரணி வட்டம்[49].
  • அருள்மிகு பச்சசையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில், முனுகப்பட்டு, ஆரணி [50]
  • ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆலயம், அய்யம்பாளையம், ஆரணி வட்டம் [51]
  • அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம், காமக்கூர், ஆரணி வட்டம்
 
படவேடு ரேணுகாம்பாள் கோயில்
 
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
 
பெரியநாயகி அம்மன் ஆலயம்
 
எந்திர சனீஸ்வரன் கோயில், ஆரணி

கல்வி நிறுவனங்கள்

தொகு

ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனி கல்வி மாவட்டம் ஆகும். தலைமை கல்வி மாவட்ட அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.

இங்கு அரசு பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆரணியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி 1915 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஓர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இவற்றில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒரு நூற்றாண்டைக் கடந்த பள்ளியாகும்.[52] அதுமட்டுமின்றி, ஆரணியில் ஒரு பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, தச்சூரில் இயங்கி வருகிறது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஓர் அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு வரை ஆரணிக் கோட்டையில் செயல்பட்டு வந்தது. கல்லூரிக்கென சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு தேவிகாபுரம் சாலையிலுள்ள தச்சூரில் செயல்படத் துவங்கியது.

 
ஆரணி பொறியியல் கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்

தொகு
  • அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி - ஆரணி[53]
  • AISECT affiliated Arni Branch IT/ITES Training Centre: MTECH Solutions, Opp RCM Church Arni.
  • பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி - ஆரணி
  • அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி, ஆரணி
  • ரேணுகாம்பாள் பொறியியல் கல்லூரி, ஆரணி - திருவண்ணாமலை சாலை, ஆரணி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தொகு
  • Dr.M.G.R. சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - ஆரணி
  • பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - குன்னத்தூர் கிராமம், ஆரணி வட்டம்
  • ரேணுகாம்பாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆரணி - திருவண்ணாமலை சாலை , ஆரணி

தொழில்நுட்பக் கல்லூரிகள்

தொகு
  • Dr.M.G.R. தொழில்நுட்பக் கல்லூரி - இரும்பேடு, ஆரணி
  • கொங்கு நாடு தொழில்நுட்பக் கல்லூரி, கூடலூர், ஆரணி
  • ரேணுகாம்பாள் தொழில்நுட்பக் கல்லூரி, ஆரணி - திருவண்ணாமலை சாலை, ஆரணி

பள்ளிகள்

தொகு
  • சுப்ரமணிய  சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி
  • சிங்காரவேலர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ( SLS மில்)
  • அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
  • சி. எஸ். ஐ. பள்ளி
  • செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி
  • கண்ணம்மாள் மழலையர் ஆரம்பப்பள்ளி
  • ஏ. சி. எஸ். மேல் நிலைப்பள்ளி
  • ஆரஞ்சு சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.ஜி.சி.எஸ்.சி. பள்ளி
  • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • எய்ம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • CSC – Common Service Centre/ Digital Seva Centre – Opp RCM Church. Arni.Contact VLE: Mr.V. Clement Raja. (Ph.D)
  • AWERD NGO, (A Voluntary Organization working for Women, Youths and Children's with various Welfare activities, since 2000

முக்கிய இடங்கள்

தொகு
  • ஆரணி காய்கறி மார்க்கெட் வளாகம்
  • ஆரணி பூ மார்க்கெட் வளாகம்
  • ஆரணி பழக்கடை மார்க்கெட் வளாகம்
  • ஆரணி பழைய பேருந்து நிலையம்
  • ஆரணி புதிய பேருந்து நிலையம்
  • ஆரணி கோட்டை (அ) இராபர்ட் கெல்லி நினைவிடம்
  • கைலாசநாதர் ஆலயம்
  • ஆரணி நகராட்சி வளாகம்
  • காந்தி சாலை
  • சத்தியமூர்த்தி சாலை
  • அரசு பொறியியல் கல்லூரி
  • அவுசிங்போர்டு ஜங்ஷன்
  • வந்தவாசி சாலை ஜங்ஷன்
  • மாங்காமரம் ஜங்ஷன்
  • வாழைப்பந்தல் சாலை ஜங்ஷன்
  • ஆரணி பட்டு உற்பத்தி செய்யும் இடம்
  • ஆரணி அரிசி உற்பத்தி செய்யும் இடம்
  • கமண்டல நாகநதி பாலம்
  • சேவூர் ஜங்ஷன் ரவுண்டானா
  • செய்யார் ஜங்ஷன் ரவுண்டானா
  • புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்
  • எஸ்.வி.நகரம் அரண்மனை
  • பூசிமலைக்குப்பம் அரண்மனை
  • ஆரணி பேருந்து பணிமனை
  • ஆரணி தனியார் பேருந்து பணிமனை

முக்கிய நபர்கள்

தொகு

ஆரணியில் சில குறிப்பிட்ட முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெயர்கள்.

இதனையும் காண்க

தொகு
  1. ஆரணி ஜாகீர்
  2. திருமலை சமணர் கோயில் வளாகம்
  3. ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
  4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், ஆரணி
  5. ஆரணிப் பட்டுச்சேலை
  6. ஆரணி மக்களவைத் தொகுதி
  7. ஆரணி (சட்டமன்றத் தொகுதி)
  8. ஆரணி சாலை தொடருந்து நிலையம்
  9. ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி
  10. ஆரணி அரிசி
  11. சேவூர் ராமச்சந்திரன்
  12. சத்தியவிஜயநகரம்
  13. ஆரணி அரண்மனை
  14. ஆரணி வருவாய் கோட்டம்
  15. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
  16. ஆரணி நகராட்சி
  17. புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், ஆரணி
  18. கமண்டல நாகநதி ஆறு
  19. ஆரணி புறவழிச்சாலை
  20. ஆரணி போர்
  21. ஆரணி கோட்டை

குறிப்புகள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என இபிஎஸ் உறுதி
  3. ஆரணியின் வரலாறு
  4. The Order of the Crest: Tracing the Alumni of Bishop Cotton Boys’ School, Bangalore (1865–2015). Penguin UK.
  5. ஆரணி தாலுகாவின் மக்கள் தொகை
  6. ஆரணி வருவாய் கோட்டம் அரசானை
  7. ஆரணி வருவாய் கோட்டத்தின் மக்கள் தொகை
  8. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை
  9. ஆரணி கல்வி மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என தமிழக அரசு வெளியீடு.
  10. ஆரணி மின்பகிர்மான கோட்டம் புதியதாக உருவாக்கப்படும் என தமிழக அரசு வெளியீடு
  11. "Arani". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  12. "Climatological Information for arani,India". India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. ஆரணி நகராட்சியின் மக்கள்தொகை
  14. 14.0 14.1 "Census Info 2011 Final population totals – Arani". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  15. "Population By Religious Community – Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  16. "Population Details". arani municipality. 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  17. "Census Info 2011 Final population totals – arani". Archived from the original on 2008-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  18. ஆரணி வரலாறு- ஆற்காடு நவாப் (திருவண்ணாமலை இணைய தளம் மூலம் எடுக்கப்பட்டது).
  19. ஆரணியின் வரலாறு- ஜாகீர்தார் ஆட்சி
  20. ஆரணி அரண்மனை வரலாறு
  21. ஆரணி நடுக்காட்டில் அமைந்துள்ள அரண்மனை
  22. ஆரணி நடுக்காட்டில் அமைந்துள்ள பிரெஞ்சு காலத்து அரண்மனை
  23. ஆரணி கோட்டையின் சிறப்புகள் மற்றும் தற்போதைய நிலைப்பாடு
  24. இரண்டு முறை மகாத்மா காந்தியடிகள் ஆரணிக்கு வருகை
  25. ஆரணி நகராட்சி தலைவர்
  26. ஆரணி நகராட்சி துணைத் தலைவர்
  27. ஆரணி நகராட்சி ஆணையர்
  28. ஆரணி சட்டமன்ற உறுப்பினர்
  29. ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர்
  30. ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா
  31. ஆரணிப் பட்டுப்புடவையின் சிறப்புகள்
  32. புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் தாங்கிய அஞ்சல் உறை வெளியீடு
  33. சென்னைபுவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஆரணி பட்டு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கவுரவம்
  34. ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?: கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
  35. ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா: ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு
  36. ஆரணி பகுதியில் பட்டு பூங்கா: ஏழுமலை எம்.பி கோரிக்கை
  37. திருவண்ணாமலைஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும்: எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி
  38. ஆரணி பட்டு வரலாறு மற்றும் ஆரணி பட்டு கைத்தறி குழுமம்
  39. கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் புதிய நூற்றாண்டு நினைவு பட்டுப்பூங்கா அமைக்கப்படும் - மாண்புமிகு அமைச்சர் ஆர்.காந்தி
  40. அரிசி உற்பத்தியில் தமிழ்நாட்டில் ஆரணி முதலிடம்
  41. ஆரணி அரிசியின் சிறப்புகள்
  42. பல சிறப்புகள் பெற்ற ஆரணி அரிசிக்கு தேசிய விருது
  43. ஆரணி சாலை தொடருந்து நிலையத்தில் ரயில் கால அட்டவணை
  44. ஆரணி வழியாக ரயில்களை இயக்க திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டம் மந்தகதியில் உள்ளது
  45. ஆரணி கைலாசநாதர் ஆலயம் வரலாறு
  46. "ரேணுகாம்பாள் ஆலயம் இணையதளம்". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  47. ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் வரலாறு
  48. தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயம் வரலாறு
  49. எந்திர சனீஸ்வரன் கோயில் வரலாறு
  50. ஆரணி பச்சையம்மன் கோவில் வரலாறு
  51. ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோவில் வரலாறு
  52. ஆரணி அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி நூற்றாண்டு விழா
  53. "Arani University of College Website".

வெளி இணைப்புகள்

தொகு