உத்திரமேரூர்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

உத்திரமேரூர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது. உத்திரமேரூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

உத்திரமேரூர்
உத்திரமநல்லூர்[1]
உத்திரமேரூர் கோவில்
உத்திரமேரூர் கோவில்
உத்திரமேரூர் is located in இந்தியா
உத்திரமேரூர்
உத்திரமேரூர்
இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரின் அமைவிடம்
உத்திரமேரூர் is located in தமிழ்நாடு
உத்திரமேரூர்
உத்திரமேரூர்
உத்திரமேரூர் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 12°36′58″N 79°45′11″E / 12.616°N 79.753°E / 12.616; 79.753
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
ஏற்றம்
62 m (203 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,194
 • அடர்த்தி3,100/km2 (8,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்www.townpanchayat.in/uthiramerur

அமைவிடம்

தொகு

போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

4.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 149 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,197 வீடுகளும், 25,194 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.74% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

கோயில்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Rajarathnam, Lakshmi. Arputha - Athisaya Aalayangal. Pustaka Digital Media. ISBN 978-93-5285-702-9.
  2. உத்திரமேரூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Uthiramerur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்திரமேரூர்&oldid=4153210" இலிருந்து மீள்விக்கப்பட்டது