சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்

சேத்துப்பட்டு (ஆங்கிலம்: Chetpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு வட்டம் மற்றும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப் பேரூராட்சியும் அமைந்துள்ளது. இந்த நகரம் போளூர் (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சேத்துப்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சேத்துப்பட்டு
CHETPET
ஆரணி புறநகர் பகுதி
சிறப்பு நிலை பேரூராட்சி
அடைபெயர்(கள்): சேத்பட்
சேத்துப்பட்டு is located in தமிழ் நாடு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
சேத்துப்பட்டு is located in இந்தியா
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°27′59″N 79°21′02″E / 12.4665154°N 79.3506284°E / 12.4665154; 79.3506284
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைசிறப்பு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்சேத்துப்பட்டு பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.அக்ரி.கிருஷ்ணமூர்த்தி
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்72 km2 (28 sq mi)
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,827
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
606 801
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4181
வாகனப் பதிவுTN 97
ஊராட்சி ஒன்றியம்சேத்துப்பட்டு
சென்னையிலிருந்து தொலைவு147 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு48 கி.மீ
போளூரிலிருந்து தொலைவு29 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு26 கிமீ
செஞ்சியிலிருந்து தொலைவு28 கிமீ
வந்தவாசியிலிருந்து தொலைவு30 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு69 கிமீ
இணையதளம்சேத்துப்பட்டு பேரூராட்சி

அமைவிடம்

தொகு

சேத்துப்பட்டு நகரம் விழுப்புரம் - ஆரணி மாநில நெடுஞ்சாலையும் மற்றும் போளூர்-செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 43 கி.மீ தொலைவிலும் மற்றும் விழுப்புரம் 66கிமீ தொலைவிலும், வடக்கே ஆரணி 26 கி.மீ தொலைவிலும் மற்றும் வேலூர் 62கிமீ தொலைவிலும், மேற்கே போளூர் 26 கிமீ தொலைவிலும், கிழக்கே வந்தவாசி 28 கிமீ தொலைவிலும், காஞ்சிபுரம் 69 கிமீ தொலைவிலும், மாநிலத்தின் தலைமையிடமான சென்னைக்கு 147 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து ஆரணி, செஞ்சி, போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு அரை மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.

பெயர்க்காரணம்

தொகு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு சிவாலயமும், பெருமாள் கோவிலும் உள்ளது. இங்குள்ள கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பெயர் சேற்றுப்பட்டு சேற்றில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் காரணமாகவோ அல்லது வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. காலப்போக்கில் மருவி சேத்துப்பட்டு என வந்திருக்கலாம்.

வரலாறு

தொகு

ஆங்கிலேய அரசுக்கும், ஐதர் அலிக்கும் இடையே நடைபெற்ற 4 போர்களில் இங்கும் நடைபெற்றுள்ளது. முதல் மைசூர் போர் ஒரு பகுதி 1769 ஆம் ஆண்டு ஆங்கில தளபதி கேரிசனுக்கும், ஐதர் அலிக்கும் சேத்துப்பட்டில் போர் நடைபெற்றது. இரண்டாம் மைசூர் போரில் ஐதர் அலிக்கும், சர் அயர்குட்டிற்கும் பல நாட்களாக இங்கு போர் நடைபெற்றதாக வரலாறு உள்ளது. மூன்றாம் மைசூர் போரின் ஒரு பகுதியும் சேத்துப்பட்டில் நடைபெற்றுள்ளது. இப்போர்களில் ஐதர் அலியின் படைகள் சேத்துப்பட்டில் உள்ள கோட்டையை அழித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளது. ஆற்காடிற்கும், பாண்டிச்சேரிகற்கும் இடையே சேத்துப்பட்டு உள்ளதால் ஆற்காடு நவாப்புக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே ஏற்பட்ட போக்குவரத்து சேத்துப்பட்டு வழியாக நடைபெற்றது.

1801 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆற்காடு நவாப்பிடம் இருந்து வட தமிழகம் முழுவதும் கைப்பற்றியது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அவ்வாறு உருவாக்கிய வட ஆற்காடு மாவட்டத்தில் 21 தாலுகாக்கள் இருந்தன.அவற்றில் சேத்துப்பட்டு தாலுகாவும் ஒன்று. 1856 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தாலுகாக்களை பிரிக்கும் போது சேத்துப்பட்டு தாலுகா நீக்கப்பட்டு சேத்துப்பட்டு தாலுகாவின் மேற்கு பகுதிகளை போளூர் தாலுகா உடனும், கிழக்கு பகுதிகளை வந்தவாசி தாலுகா உடனும் மற்றும் வடக்கு பகுதிகளை ஆரணி தாலுகா உடனும் இணைக்கப்பட்டது.[2]

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

7.50 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,745 வீடுகளும், 19,827 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.43% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர். [4]

நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு

இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை சேத்துப்பட்டு பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி போளூர் (சட்டமன்றத் தொகுதி)
போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அக்ரி.கிருஷ்ணமூர்த்தி
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
ஆரணி மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

வருவாய் வட்டம்

தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சேத்துப்பட்டு வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டம் ஆரணி வட்டத்தின் தெற்குப் பகுதிகளையும் மற்றும் போளூர் வட்டத்தின் கிழக்கு பகுதிகளையும் கொண்டு 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 76 வருவாய் கிராமங்களையும், 1,46,806 மக்கள் தொகையையும் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் சேத்துப்பட்டு பேரூராட்சி மற்றும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது.

போக்குவரத்து

தொகு

சாலை வசதிகள்

தொகு

சேத்துப்பட்டு நகரத்தை பொறுத்த வரை ஆரணி, வேலூர், ஆற்காடு மற்றும் செஞ்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 4 உம் மற்றும் போளூர் மற்றும் வந்தவாசி, மேல்மருவத்தூர், செய்யூர், உத்திரமேரூர், சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 115 உம் இந்நகரை கடந்து செல்கிறது.

1. மாநில நெடுஞ்சாலை SH4 : விழுப்புரம் - செஞ்சி - சேத்துப்பட்டு - ஆரணி - ஆற்காடு சாலை

2. மாநில நெடுஞ்சாலை SH115 : போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யூர் சாலை

3. மாநில நெடுஞ்சாலை SH4A : சேத்துப்பட்டு - அவலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலை

4. மாவட்ட சாலை : சேத்துப்பட்டு - பெரணமல்லூர்- சாலை

பேருந்து வசதிகள்

தொகு

இதனையும் காண்க:சேத்துப்பட்டு பேருந்து நிலையம்

சேத்துப்பட்டு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக விழுப்புரம் - ஆரணி மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் பெரணமல்லூர், செஞ்சி, போளூர், தேசூர், அவலூர்பேட்டை மற்றும் ஆரணி ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வழி சேருமிடம்
ஆரணி மார்க்கமாக ஆரணி, வேலூர், திருப்பதி, படவேடு, திருப்பத்தூர், குடியாத்தம், ஆற்காடு, இராணிப்பேட்டை, சென்னை, தி.நகர் செல்லும் பேருந்துகள்
பெரிய கொழப்பலூர் மார்க்கமாக செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை செல்லும் பேருந்துகள்
பெரணமல்லூர் மார்க்கமாக பெரணமல்லூர், செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, வெம்பாக்கம் செல்லும் பேருந்துகள்
வந்தவாசி மார்க்கமாக வந்தவாசி, காஞ்சிபுரம், திருத்தணி, மேல்மருவத்தூர், செய்யூர், சென்னை, உத்திரமேரூர், தாம்பரம் செல்லும் பேருந்துகள்
தேசூர் மார்க்கமாக தேசூர், தெள்ளாறு, புதுச்சேரி செல்லும் பேருந்துகள்
செஞ்சி மார்க்கமாக செஞ்சி,விழுப்புரம், விருத்தாசலம், திட்டக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நன்னிலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர், நெய்வேலி, மன்னார்குடி, சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
மேல்மலையனூர் மார்க்கமாக மேல்மலையனூர், அவலூர்பேட்டை, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
அவலூர்பேட்டை மார்க்கமாக அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு செல்லும் பேருந்துகள்
தேவிகாபுரம் மார்க்கமாக தேவிகாபுரம், போளூர், படவேடு, செங்கம், புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம், வில்வாரணி செல்லும் பேருந்துகள்

இரயில் போக்குவரத்து வசதிகள்

தொகு

சேத்துப்பட்டு நகரில் இரயில் சேவைகள் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள போளூர் தொடருந்து நிலையம் (26 கிமீ) மற்றும் ஆரணி ரயில் நிலையம் (36 கிமீ) ஆகிய ரயில் நிலையம் மூலம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து திருவண்ணாமலை, வேலூர், பெங்களூரு, திருப்பதி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளது.

கோவில்கள்

தொகு

யோகராமா திருக்கோயில்

தொகு

இந்த கோயில் சேத்துப்பட்டுக்கு அருகிலுள்ள போளூர் - சென்னை சாலை நெடுங்குணம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்து கடவுள் விஷ்ணுவுக்கு யோக ராம கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராமர் ஒரு சின் முத்ரா தோரணையில் தனது வில் இல்லாமல் ஹனுமனின் வேத ஓதத்தைக் கேட்கவில்லை.தீர்காச்சலம் மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 7 நாள் கார் திருவிழா, 10 வது நாள் இந்திரவிமன திருவிழா அனைத்து சமூகங்களின் பங்களிப்புடன் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அல்லது கானு என்று அழைக்கப்படும் பொங்கலின் இரண்டாவது நாளில், ஸ்ரீ ராமச்சந்திரா ஜெகநாதபுரம், அரசம்பட்டு, வேப்பம்பட்டு, வில்லிவனம், சேத்துபட்டு பஜார் மற்றும் பஜம்பேட்டை வழியாக செல்லும் மலையைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். வைகாசி விசகம் (மே-ஜூன்) கருடசேவை, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, அனைத்து சனிக்கிழமையும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு , தீபாவளி, பொங்கல் ஆகிய நல்ல நாட்களில் கூட்டமாக இருக்கும் போது மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படுகின்றன[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. | சேத்துப்பட்டின் வரலாறு
  3. சேத்துப்பட்டு பேரூராட்சியின் இணையதளம்
  4. Chetpet Population Census 2011
  5. யோகாராமா திருக்கோயில் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்துப்பட்டு&oldid=4127681" இலிருந்து மீள்விக்கப்பட்டது