சேத்துப்பட்டு வட்டம்
சேத்துப்பட்டு வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வருவாய் வட்டம், ஆரணி வட்டத்தின் தென்பகுதிகளைக் கொண்டு, மே 2012ல் நிறுவப்பட்டது. [2]இவ்வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சேத்துப்பட்டில் செயல்படுகிறது. இவ்வட்டம் 76 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]
சேத்துப்பட்டு | |
---|---|
வருவாய் வட்டம் | |
ஆள்கூறுகள்: 12°27′59″N 79°21′02″E / 12.4665154°N 79.3506284°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
இவ்வட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேத்துப்பட்டு பேரூராட்சி உள்ளது. இந்த வட்டம் போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த வட்டத்தில் 4 உள்வட்டங்கள் உள்ளன
அமைவிடம்
தொகுசேத்துப்பட்டு வட்டத்தின் வடக்கில் ஆரணி வட்டம், கிழக்கில் வந்தவாசி வட்டம், தெற்கில் விழுப்புரம் மாவட்டம், மேற்கில் போளூர் வட்டம், தென்மேற்கில் கலசப்பாக்கம் வட்டம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் வட்டங்கள் எல்லைகளாக உள்ளது.
சேத்துப்பட்டு, மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலையிலிருந்து 46 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 137 கிமீ தொலைவிலும் உள்ளது.
வருவாய் கிராமங்கள்
தொகுசேத்துப்பட்டு வருவாய் வட்டத்தில் 76 வருவாய் கிராமங்கள் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,46,806 ஆகும். அதில் 72,403 ஆண்களும், 74,400 பெண்களும் உள்ளனர். 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புக்ள்
தொகு