சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேத்துப்பட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,387 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 11,570 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 364 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுசேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விளாப்பாக்கம்
- வம்பலூர்
- வடமாதிமங்கலம்
- ஊத்தூர்
- உலகம்பட்டு
- தும்பூர்
- திருமலை
- தத்தனூர்
- தச்சாம்பாடி
- செவரப்பூண்டி
- செம்மியமங்கலம்
- சனிக்கவாடி
- சதுப்பேரி
- இராந்தம்
- இராஜம்மாபுரம்
- பெரணம்பாக்கம்
- பெலாசூர்
- ஓதலவாடி
- ஓகூர்
- நரசிங்கபுரம்
- நம்பேடு
- மொடையூர்
- மட்டப்பிறையூர்
- மருததுவாம்பாடி
- மன்சுராபாத்
- மண்டகொளத்தூர்
- மடவிளாகம்
- கொத்தந்தவாடி
- கொரால்பாக்கம்
- கொழாவூர்
- கொளக்கரவாடி
- கீழ்பட்டு
- கரிக்காத்தூர்
- கரைப்பூண்டி
- இந்திரவனம்
- கூடலூர்
- கெங்கசூடாமணி
- ஈயகொளத்தூர்
- எட்டிவாடி
- இடையான்கொளத்தூர்
- தேவிமங்கலம்
- சித்தாத்துரை
- செய்யானந்தல்
- ஆத்துரை
- அரும்பலூர்
- அரியாத்தூர்
- அப்பேடு
- அல்லியாளமங்கலம்
- ஆலம்பூண்டி
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்