செய்யூர் தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது செய்யூர் ஊராட்சியில் அமைந்த செய்யூர் கிராமம், மதுராந்தகத்தில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முந்தைய ஜெயம்கொண்ட சோழபுரம், சேயூர் (Seyur) மற்றும் பேலபுரி (Belapuri) என்று அழைக்கப்பட்டது.

ஆரம்ப நாட்களில், இந்த பகுதியில் இருந்த ஓர் அடர்ந்த காட்டில் வேட்டையாடும் வழக்கத்தை சோழர்கள் வைத்திருந்திருக்கிறார்கள். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது செய்யூர் சிவன் கோவில். சிவன் கோவில் அருகில், அவரது குழந்தை அம்சம் கொண்ட முருகன் கோவில் உள்ளது.

தமிழில் 'சேய்' என்பது 'குழந்தை' எனப் பொருள்படும். முருகனைச் 'சேய்' என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. முருகன் கோயில் உள்ள இடம் சேயூர். சேயூர் முருகன் உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இவ்வூர் முருகன்மீது பாடப்பட்டவை. சேயூர் (பின்னர் செய்யூர்) என்ற பெயராக மருவிற்று.

கந்தசாமி கோவில் அமைந்துள்ள செய்யூர் கிராமத்தின் தோற்றம் குறித்த கதை ஒன்று உள்ளது. கோவில் இராசேந்திர சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.[சான்று தேவை] செய்யூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005


"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யூர்&oldid=4153195" இலிருந்து மீள்விக்கப்பட்டது