போளூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரங்களில் இது 4வது பெரிய நகரமாகும்.

போளூர் (ஆங்கிலம்: Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி துணை மாவட்டத்தில் உள்ள, போளூர் வட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலை பேரூராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

போளூர்
POLUR
சிறப்பு நிலை பேரூராட்சி
போளூர் is located in தமிழ் நாடு
போளூர்
போளூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
போளூர் is located in இந்தியா
போளூர்
போளூர்
போளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைசிறப்பு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்12.58 km2 (4.86 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்173 m (568 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்55,278
இனங்கள்போளூர்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு606 803
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04181
வாகனப் பதிவுTN 97
சென்னையிலிருந்து தொலைவு172 கி.மீ. (107 மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு38 கி.மீ. (24 மைல்)
வேலூரிலிருந்து தொலைவு53 கி.மீ. (33 மைல்)
ஆரணியிலிருந்து தொலைவு29 கி.மீ. (18 மைல்)
வந்தவாசியிலிருந்து தொலைவு58 கி.மீ. (36 மைல்)
சித்தூரிலிருந்து தொலைவு89 கி.மீ. (55 மைல்)
கடலூரிலிருந்து தொலைவு139 கி.மீ. (86 மைல்)
இணையதளம்போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி

இந்த நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியப் பகுதியிலும் மற்றும் இந்த மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமுமாகும். இந்த நகரத்தில் விவசாயம் முக்கிய பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் ஆரணி - செங்கம் மாநில நெடுஞ்சாலை SH133 மற்றும் கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் - மங்களூரு NH234 தேசிய நெடுஞ்சாலை மற்றும் போளூர் - வந்தவாசி - செய்யூர் SH134 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கும், பட்டு நகரான ஆரணிக்கும் அருகாமையில் அமைந்துள்ளது.

போளூர் நகரம் உருவாக்கம் தொகு

  • போளூர் தொகுதி 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தலை 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.

பெயர்க்காரணம் தொகு

பொருளூர் என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. [5]. இங்கிருந்து திருவண்ணாமலை மற்றும் ஆரணி நகரை அரைமணி நேரத்திலும் மற்றும் வேலூருக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.

அமைவிடம் தொகு

கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கி.மீ.; வடக்கே வேலூர் 52 கி.மீ.; தென்கிழக்கே ஆரணி 29 கி.மீ.; கிழக்கே சேத்துப்பட்டு 28 கி.மீ. மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

12.58 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல் தொகு


 

போளூரிலுள்ள சமயங்கள் (2011)

  இந்து (94.02%)
  சைனம் (0.01%)
  மற்றவை (0.12%)

[1]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 13,706 வீடுகளும், போளூர் நகர மக்கள் தொகை 55274 மக்கள்தொகையும் கொண்டது. இவற்றில் ஆண்கள் 25637 பேரும், பெண்கள் 29637 பேரும் உள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19019,767—    
19119,946+1.8%
192112,330+24.0%
193113,098+6.2%
194113,967+6.6%
195115,212+8.9%
196116,441+8.1%
198123,462+42.7%
199130,196+28.7%
200141,376+37.0%
201155,278+33.6%
Sources:

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பொருளாதாரம் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். போளூர் வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும், சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி குறைவாகவே கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.

சிறப்புகள் தொகு

போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலைக்கு, வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும். போளுரின் அமைவிடம் வட தமிழகம் ஆகும். போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது. இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. போளூர் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.

இது சுயம்பு வடிவம் ஆனது.

நிர்வாகம் மற்றும் அரசியல் தொகு

இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. போளூர் நகரம், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை போளூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி போளூர் (சட்டமன்றத் தொகுதி)
போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அக்ரி.கிருஷ்ணமூர்த்தி
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
ஆரணி மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

அரசியல் தொகு

வருவாய் வட்டம் தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

போக்குவரத்து தொகு

சாலை வசதிகள் தொகு

 
போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை
 
போளூர் நகரம்

போளூர் நகரைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, மற்றும் சித்தூர், திருப்பதி, வேலூர், குடியாத்தம், மங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும்தேசிய நெடுஞ்சாலை 234 உம் மற்றும் மாநில நெடுஞ்சாலை 9 உம் இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, செங்கம், சேலம் , மற்றும் ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 43 சாலையும் மற்றும் சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யூர் மற்றும் சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 115 உம் இந்நகரின் வழியாகச் செல்கின்றன.

ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.

பேருந்து சேவைகள் தொகு

போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி , கண்ணமங்கலம், புதுப்பாளையம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் அவலூர்பேட்டை உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் தேசிய நெடுஞ்சாலை 234 வழியாக தான் செல்லமுடியும்.

போளூரிலிருந்து, வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை, ஆரணி, சென்னை, சேத்துப்பட்டு மற்றும் வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன.

வழி சேருமிடம்
சென்னைக்கு
ஆரணி மார்க்கமாக ஆரணி, ஆற்காடு, வாலாஜா, இராணிப்பேட்டை, திருத்தணி, சென்னை, பூவிருந்தவல்லி, செய்யாறு, காஞ்சிபுரம், வந்தவாசி, செல்லும் பேருந்துகள்
திருவண்ணாமலை மார்க்கமாக திருவண்ணாமலை, செங்கம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஒசூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், ஆத்தூர், விருத்தாசலம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, மதுரை, சிதம்பரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், கும்பகோணம், தஞ்சாவூர், நெய்வேலி, செங்கம், சாத்தனூர் அணை, தானிப்பாடி செல்லும் பேருந்துகள்
கண்ணமங்கலம் மார்க்கமாக படவேடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, சித்தூர், திருப்பதி, ஆற்காடு காளஹஸ்தி செல்லும் பேருந்துகள்
சேத்துப்பட்டு மார்க்கமாக சேத்துப்பட்டு,வந்தவாசி, செய்யூர், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை செல்லும் பேருந்துகள்
புதுப்பாளையம் மார்க்கமாக புதுப்பாளையம், செங்கம், ஆதமங்கலம்புதூர், சாத்தனூர் அணை செல்லும் பேருந்துகள்
அத்திமூர் மார்க்கமாக அத்திமூர், சமுனாமரத்தூர், அமிர்தி, வேலூர் செல்லும் பேருந்துகள்
குண்ணத்தூர் மார்க்கமாக பொத்தரை, ஆத்துவாம்பாடி, துரிஞ்சிகுப்பம் செல்லும் பேருந்துகள்

இரயில் போக்குவரத்து தொகு

போளூரில் ஒரு இரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - ஆரணி ரோடு - வேலூர்-காட்பாடி - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர இரயில்கள் மற்றும் அனைத்து இரயில்களும் இந்த போளூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.


வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி 56885 திருப்பதி விழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி 22603 விழுப்புரம் திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி 56886 விழுப்புரம் காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி 56881 காட்பாடி விழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி 56882 விழுப்புரம் திருப்பதி
காட்பாடி-விழுப்புரம் 56883 காட்பாடி விழுப்புரம்
சாலுக்யா விரைவு வண்டி 11005 மும்பை தாதர் சென்ட்ரல் புதுச்சேரி
சாலுக்யா விரைவு வண்டி 11006 புதுச்சேரி மும்பை

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்&oldid=3834487" இருந்து மீள்விக்கப்பட்டது