முதன்மை பட்டியைத் திறக்கவும்

கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் உள்ள ஒரு ஊர்.

கள்ளக்குறிச்சி (Kallakurichi) தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடம் மற்றும் முதல் நிலை நகராட்சியும் ஆகும்.

கள்ளக்குறிச்சி
KALLAKURICHI
முதல் நிலை நகராட்சி்
ஆள்கூறுகள்: 11°44′18″N 78°57′50″E / 11.7382082°N 78.9637707°E / 11.7382082; 78.9637707ஆள்கூறுகள்: 11°44′18″N 78°57′50″E / 11.7382082°N 78.9637707°E / 11.7382082; 78.9637707
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாகாணம்தொண்டை நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு2019
அரசு
 • வகைமுதல் நிலை நகராட்சி
 • Bodyகள்ளக்குறிச்சி நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்33.13
ஏற்றம்44
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்52,507
 • அடர்த்தி1
மொழி
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீட்டு எண்+91–4146(STD எண்)
வாகனப் பதிவுTN–32
சென்னையிலிருந்து தொலைவு244 கி.மீ
மதுரையிலிருந்து தொலைவு280 கி.மீ
பெங்களூரிலிருந்து தொலைவு245 கி.மீ
பால் விகிதம்1019 /
இந்திய காலநிலைAw(Köppen)
எழுத்தறிவு90.16%
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு69 கிமீ
விழுப்புரத்திலிருந்து தொலைவு76 கிமீ
இணையதளம்கள்ளக்குறிச்சி நகராட்சி

முக்கிய சுற்றுலாதளங்கள்தொகு

கோமுகி அணை, மணிமுக்தா அணை, சின்னதிருப்பதி கோவில்,தென்பொன்பரப்பி சிவன் கோவில்,ஆஞ்சினேயர் கோவில், கல்வராயன் மலை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி, தியாகதுருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள்.எஸ்.ஒகையூர் பெரிய ஏரி மற்றும் ஒகையூர் பழமைவாய்ந்த சிவன் கோவில், சித்தலுர் பெரியாயி கோவில்.

தொழிற்சாலைகள்தொகு

  • கோமுகி சக்கரைஆலை
  • மூங்கில்துறைபட்டு சக்கரைஆலை
  • தியாகதுருகம் சக்கரைஆலை
  • கள்ளக்குறிச்சியை சுற்றி பரவலாக அரிசிஆலைகள்

மக்கள் வகைப்பாடுதொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,801 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,507 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.17% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5541 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும்ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.87% , இசுலாமியர்கள் 13.40%, கிறித்தவர்கள் 1.72% , தமிழ்ச் சமணர்கள் 0.17%, மற்றும் பிறர் 0.85% ஆகவுள்ளனர்.[2]

படத்தொகுப்புதொகு

ஆதாரங்கள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளக்குறிச்சி&oldid=2873335" இருந்து மீள்விக்கப்பட்டது