தே. மலையரசன்
தே. மலையரசன் (Malaiyarasan D) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.[1] மலையரசன் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] மலையரசன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார்.
தே. மலையரசன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | கவுதம சிகாமணி |
தொகுதி | கள்ளக்குறிச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வேலை | அரசியல்வாதி |
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் ஒரு வியபாரியாவார். தியாகதுருகம் திமுக பேரூர் கழக செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கிய இவர் ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் என கட்சிப் பணியாற்றியுள்ளார். சிறுநாகலூர் மற்றும் பொறையூர் ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டுள்ளார். இவரது மனைவியின் பெயர் சாந்தி மலையரசன். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kallakurichi Election Result 2024 Vs 2019: Kallakurichi Winner, Vote Share; Check Party-wise Performance". Times Now (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Malaiyarasan D , DMK Election Results LIVE: Latest Updates On Malaiyarasan D , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Kallakurichi Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "கள்ளக்குறிச்சி தொகுதி திமுக தே.மலையரசன் - சிறு குறிப்பு", Hindu Tamil Thisai, 2024-03-21, பார்க்கப்பட்ட நாள் 2024-06-11