கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 14வது தொகுதி ஆகும்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்13,90,175[1]
சட்டமன்றத் தொகுதிகள்78. இரிஷிவந்தியம்
79. சங்கராபுரம்
80. கள்ளக்குறிச்சி (தனி)
81. கங்கவள்ளி (தனி)
82. ஆத்தூர் (தனி)
83. ஏற்காடு (தனி)

தொகுதி மறுசீரமைப்பு தொகு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, உருவாகிய தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. இரிஷிவந்தியம்
  2. சங்கராபுரம்
  3. கள்ளக்குறிச்சி (தனி)
  4. கங்கவள்ளி (தனி)
  5. ஆத்தூர் (தனி)
  6. ஏற்காடு (தனி)

வென்றவர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 ஆதி சங்கர் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 க. காமராஜ் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 கவுதம சிகாமணி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை தொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,96,921 6,93,123 131 13,90,175 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம் தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 77.28% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 78.26% 0.98% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009) தொகு

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், ஆதி சங்கர் (அரசியல்வாதி)|ஆதி சங்கர் பாமகவின் கே. தனராசை 108,608 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். இங்கு போட்டியிட்ட நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாகிய விஜய டி. இராஜேந்தர் 8,211 வாக்குகள் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆதி சங்கர் திமுக 3,63,601
கே. தனராசு பாமக 2,54,993
கே. எல். சுதீஸ் தேமுதிக 1,32,223
எசு. இரமேசு கொமுபே 17,818
அருண் கென்னடி சுயேட்சை 13,216
விஜய டி இராஜேந்தர் சுயேட்சை 8,211

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014) தொகு

முக்கிய வேட்பாளர்கள் தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
க.காமராஜ் அதிமுக 5,33,383
இரா.மணிமாறன் திமுக 3,09,876
வி.பி. ஈஸ்வரன் தே.மு.தி.க 1,64,183
ஆர். தேவதாஸ் இதேகா 39,677

17வது மக்களவைத் தேர்தல் (2019) தொகு

வாக்காளர் புள்ளி விவரம் தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
12,04,375[4]

முக்கிய வேட்பாளர்கள் தொகு

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 18 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, தேமுதிக வேட்பாளரான, சுதீசை 3,99,919 வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கவுதம சிகாமணி   திமுக 7,21,713 59.92%
சுதீஷ்   தேமுதிக 3,21,794 26.79%
கோமுகி மணியன்   அமமுக 50,179 4.17%
சர்புதீன்   நாம் தமிழர் கட்சி 30,246 2.51%
கணேஷ்   மக்கள் நீதி மய்யம் 14,587 1.21%
நோட்டா - - 11,576 0.96%

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. http://www.elections.tn.gov.in/Reports/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2018. 
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014. 
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2014. 
  4. "General Election 2019 - Election Commission of India". http://results.eci.gov.in/pc/en/constituencywise/ConstituencywiseS2214.htm?ac=14. பார்த்த நாள்: 10 August 2019. 

வெளியிணைப்புகள் தொகு