கவுதம சிகாமணி

இந்திய அரசியல்வாதி

கவுதம சிகாமணி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கை வரலாறு

தொகு

இவர் திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடியின் மகனாவார்.[2] இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவப் படிப்பு படித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குற்ற வழக்குகள்

தொகு

இவர் கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த க. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் க. பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.[4][5][6][7][8]

குற்ற வழக்குகள்

தொகு

இவர் கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19 சூன் 2023 அன்று பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.[4][5][6][8]

17 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், அமைச்சர் க. பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடத்தியது.[9] சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகும் கவுதம சிகாம்மணியை, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இரவு 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி வரை விசாரிக்கப்பட்டார். மீண்டும் 18 சூலை 2023 அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கவுதம சிகாமணியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். 19 சூலை 2023 அன்று கவுதம சிகாமணியை அமலாக்கத்துறையினர் தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
  2. "கள்ளக்குறிச்சிக்கு மோதும் மூன்று அணிகள்- விழுப்புரம் திமுக-வில் விறுவிறு விவாதம்". இந்து தமிழ் (பிப்ரவரி 26, 2019)
  3. "கவுதம சிகாமணி வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்". தினமலர் (மே 25, 2019)
  4. 4.0 4.1 அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி
  5. 5.0 5.1 Blow to Tamil Nadu minister Ponmudi as court dismisses plea in corruption case
  6. 6.0 6.1 அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
  7. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி
  8. 8.0 8.1 செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
  9. பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுதம_சிகாமணி&oldid=3943383" இலிருந்து மீள்விக்கப்பட்டது