அமலாக்க இயக்குனரகம்

அமலாக்கப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குனரகம் (Directorate General of Economic Enforcement or Enforcement Directorate [ED]) (இந்தி: प्रवर्तन निदेशालय) என்பது இந்தியாவில் பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்.[1] அமலாக்கப் பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின், வருவாய்த்றையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் அமலாக்கும் அமைப்பு. அமலாக்கப் பிரிவு இந்தியக் காவல் பணி அதிகாரிகள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருமானவரி அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டும் செயல்படுகிறது.

வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம், 1999 (Foreign Exchange Management Act, 1999-FEMA) நடைமுறைப்படுத்த, இந்திய நடுவண் அரசால், அமலாக்கப்பிரிவு 1 சூன் 2000ஆம் நாளில் அமைக்கப்பட்டது.[2]

நோக்கம்தொகு

அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தின் முதன்மையான இரண்டு பணிகள், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act 1999 (FEMA)), மற்றும் கணக்கில் வராத கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)) ஆகிய இரண்டு சட்டங்களை அமல் படுத்துவதும், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதேயாகும்.[3]

அமைப்புதொகு

தலைமை இயக்குனரின் தலைமையில், அமலாக்கப்பிரிவின் தலைமையிடம் புதுதில்லியிலும், அதன் பத்து மண்டல அலுவலகங்கள், மண்டல இயக்குனர்களின் தலைமையில் மும்பை, கொல்கத்தா, சண்டிகர், சென்னை, அகமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்படுகிறது. அமலாக்க இயக்குனரகத்தின் துணை மண்டல அலுவலகங்கள், இணை இயக்குனர்களின் தலைமையில், ஆக்ரா, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், வாரணாசி, ஹைதராபாத், குவகாத்தி, மற்றும் பஞ்சிம் ஆகிய இடங்களில் செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Official Website".
  2. http://www.ceib.nic.in/ed.,htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-04 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. http://www.directorateofenforcement.gov.in/about-us.html[

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலாக்க_இயக்குனரகம்&oldid=3585942" இருந்து மீள்விக்கப்பட்டது