நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman; பிறப்பு: 18 ஆகத்து 1959) இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.[5] இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.[7]
நிர்மலா சீதாராமன் | |
---|---|
நிதித்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர்[1] | |
பதவியில் மே 26, 2014 – செப்டம்பர் 15, 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜெயந்த் சின்ஹா |
பின்னவர் | சுரேஷ் பிரபு |
பாசக பேச்சாளர் | |
பதவியில் 2010–2014 | |
பின்னவர் | சாயினா |
ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 26 சூன் 2014 – 21 சூன் 2016 | |
கருநாடக மாநிலங்களவை உறுப்பினர்[2] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சூலை 2016 | |
முன்னையவர் | வெங்கையா நாயுடு, பாசக |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1959 மதுரை, சென்னை மாநிலம் இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பரக்கல பிரபாகர் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | ஐதராபாது, தெலுங்கானா, இந்தியா[3][4] |
முன்னாள் கல்லூரி | சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
கல்வி
தொகுநிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தில்,[8] சாவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமனுக்கு மகளாகப் பிறந்தார். சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[9] நிர்மலா சீதாராமன் 1980-ல் திருச்சியிலுள்ள சீதாலச்சுமி இராமசாமி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[10][11][12]
வாழ்க்கை
தொகுநிர்மலாவின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.[13] நிர்மலா சீதாராமன், முனைவர் பரகலா பிரபாகர் என்பவரை மணந்தார். பிரபாகர், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரின் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியவர்.[14][15][16] இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.[17][18]
பணி
தொகுநிர்மலா சீதாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய சனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.
வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்
தொகுஇந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், மே 26, 2014 அன்று நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் முதல்வரான பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.
நிதி அமைச்சர்
தொகு2019 மே 31 முதல் இந்திய மத்திய அரசு நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.[19][20][21]
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு 2019-ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[22] போர்ப்ஸ் இதழ் 2019ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் 34வது இடத்தை வழங்கியது.[23]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://commerce.nic.in/bio/CIMBiodata.pdf
- ↑ http://www.ndtv.com/india-news/congress-wins-3-rajya-sabha-seats-from-karnataka-bjp-gets-1-1418017
- ↑ "National Leadership from Andhra Pradesh - Official BJP site of Andhra Pradesh Nirmala sitharaman's address and contact information". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ "Official BJP National website". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ "Cabinet rejig: A nod for BJP’s young champs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 September 2017. http://timesofindia.indiatimes.com/india/cabinet-rejig-a-nod-for-bjps-young-champs/articleshow/60344186.cms. பார்த்த நாள்: 3 September 2017.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=984171
- ↑ "Bharatiya Janata Party - The Party with a Difference". Bjp.org. Archived from the original on 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
- ↑ "A power couple whom AP looks up to". Times of India. https://www.timesofindia.com/city/hyderabad/A-power-couple-whom-AP-looks-up-to/articleshow/38766320.cms.
- ↑ Phadnis, Aditi (4 September 2017). "The rise and rise of Nirmala Sitharaman: From spokesperson to defence minister". Business Standard இம் மூலத்தில் இருந்து 6 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170906121736/http://www.business-standard.com/article/politics/rise-of-nirmala-sitharaman-from-spokesperson-to-defence-minister-117090400030_1.html.
- ↑ Krishnamoorthy, R. (4 September 2017). "Nirmala Sitharaman, the pride of Tiruchi". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171202124119/http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/nirmala-sitharaman-the-pride-of-tiruchi/article19618658.ece.
- ↑ Sitharaman, Nirmala (30 May 2016). "Rajya Sabha Affidavits" (PDF). p. 7.
- ↑ "Nirmala Sitharaman appointed Finance Minister in Modi govt 2.0 as Arun Jaitley retreats". The Financial Express. 31 May 2019 இம் மூலத்தில் இருந்து 1 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190601011218/https://www.financialexpress.com/economy/nirmala-sitharaman-appointed-finance-minister-in-modi-govt-2-0-as-arun-jaitley-retreats/1594251/.
- ↑ தமிழ்நாட்டுப் பெண்- நிர்மலா சீதாராமன்
- ↑ "AP govt advisor and Nirmala Sitharaman's husband Parakala Prabhakar quits, blames Jagan". 19 June 2018. Archived from the original on 20 November 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
- ↑ "In Nirmala Sitharaman, India Gets Its Second Woman Defence Minister After Indira Gandhi". Huffington Post India. 3 September 2017 இம் மூலத்தில் இருந்து 13 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170913183454/http://www.huffingtonpost.in/2017/09/03/in-nirmala-sitharaman-india-gets-its-second-woman-defence-minis_a_23195198/.
- ↑ "12 Unknown Facts About Nirmala Sitharaman: The Sales Girl Bit Will Surprise You". The Hans India. https://www.thehansindia.com/business/12-unknown-facts-about-nirmala-sitharaman-the-sales-girl-bit-will-surprise-you-626023.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : BJP spokesperson finds her new role challenging". The Hindu. 2010-04-03. Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-22.
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
- ↑ Staff Reporter (12 June 2019). "Nirmala Sitharaman, Jaishankar to get JNU's Distinguished Alumni Award". The Hindu. https://www.thehindu.com/news/national/sitharaman-and-jaishankar-to-get-jnus-distinguished-alumni-award/article27891307.ece.
- ↑ "Nirmala Sitharaman". Forbes. Archived from the original on 13 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
வெளியிணைப்புகள்
தொகு- டிவிட்டர் தளத்தில் நிர்மலா சீதாராமன்
- யூடியூபில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் - பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் 2019 ஜனவரி 4 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.