பரகலா பிரபாகர்

இந்திய அரசியல்வாதி

பரகலா பிரபாகர் (Parakala Prabhakar) (பிறப்பு ஜனவரி 2,1959) ஓர் இந்திய அரசியல் பொருளாதார நிபுணரும் மற்றும் சமூக வர்ணனையாளரும் ஆவார். இவர் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றினார். ஜூலை 2014 முதல் ஜூன் 2018 வரை ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சர் பதவிக்கு ஈடான பதவி வகித்தார். பல ஆண்டுகளாக ஆந்திரப் பிரதேசத்தின் தொலைக்காட்சி நிறுவனங்களில் நடப்பு விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழங்கி வந்தார். ஈடிவி2யில் பிரதித்வனி மற்றும் என்டிவியில் நமஸ்தே ஆந்திரப் பிரதேசம் ஆகியவை இவரது நிகழ்ச்சிகள்.[1] பிரசா ராச்யம் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளராகவும், அதன் நிறுவன பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[2] 2000களின் முற்பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திரப் பிரதேச பிரிவின் செய்தித் தொடர்பாளராக பரகலா இருந்தார்.[3] தற்போதைய இந்திய அரசில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவரது மனைவியாவார்.

பரகலா பிரபாகர்
2015இல் பரகலா பிரபாகர்
பிறப்பு2 சனவரி 1959 (1959-01-02) (அகவை 65)
நரசாபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசம், India
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி
  • அரசியல் விமர்சகர்
  • அரசியல் பொருளாதார நிபுணர்
அறியப்படுவதுஆந்திரப் பிரதேச அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர்
வாழ்க்கைத்
துணை
நிர்மலா சீதாராமன் (திருமணம் 1986)
பிள்ளைகள்1
வலைத்தளம்
www.parakala.org

சொந்த வாழ்க்கை

தொகு

பரகலா, ஆந்திராவின் நரசாபுரத்தில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவரது தாயார் பரகலா காளிகாம்பா ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதே நேரத்தில் இவரது தந்தை பரகலா சேசாவதாரம் நரசாபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 1970 களிலும் 1980 களின் முற்பகுதியிலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று அமைச்சரவைகளில் பணியாற்றினார். இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றார். புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

பிரபாகர் 1986 இல் நிர்மலா சீதாராமனை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[5][6]

அரசியல் வாழ்க்கை

தொகு

பிரசா ராச்யம் கட்சியில் சேருவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

பிரசா ராச்சியம் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர்[7] ஏப்ரல் 2009 இல், மாநிலத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, கட்சியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடுகளைக் காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Parakala punctures Praja Rajyam". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
  2. TNM Staff (June 19, 2018). "AP govt advisor and Nirmala Sitharaman's husband Parakala Prabhakar quits, blames Jagan". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
  3. "Parakala Prabhakar puts in his papers" "The New Indian Express", 20 June 2018
  4. "A power couple whom AP looks up to". Times of India. https://www.timesofindia.com/city/hyderabad/A-power-couple-whom-AP-looks-up-to/articleshow/38766320.cms. பார்த்த நாள்: 21 July 2014. 
  5. "Andhra Pradesh / Hyderabad News : BJP spokesperson finds her new role challenging". The Hindu. 2010-04-03. Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-22.
  7. Arikatla, Venkat (2008-09-05). "Interview: 'We'll sweep next polls'". greatandhra.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  8. "Praja Rajyam spokesman spits venom, quits". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரகலா_பிரபாகர்&oldid=3933739" இலிருந்து மீள்விக்கப்பட்டது