மனோகர் பாரிக்கர்

கோவா முதல்வர்
(மனோகர் பரிக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர் (Manohar Gopalkrishna Prabhu Parrikar, திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019)[3] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[4][5] இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்..

மனோகர் பாரிக்கர்
10ஆவது கோவா முதல்வர்
பதவியில்
14 மார்ச் 2017[1] – 17 மார்ச் 2019
ஆளுநர்மிருதுளா சின்கா
முன்னையவர்லட்சுமிகாந்த் பர்சேகர்
பதவியில்
9 மார்ச் 2012 – 8 நவம்பர் 2014
ஆளுநர்கே. சங்கரநாராயணன்
பாரத் வீர் வான்ச்சூ
மார்கரட் அல்வா
ஓம் பிரகாஷ் கோலி
மிருதுளா சின்ஹா[2]
முன்னையவர்திகம்பர் காமத்
பின்னவர்லட்சுமிகாந்த் பர்சேகர்
பதவியில்
24 அக்டோபர் 2000 – 2 பிப்ரவரி 2005
ஆளுநர்மொகமது பாசல்
கிதார்நாத் சகானி
மொகமது பாசல்
எஸ். சி. ஜாமீர்
முன்னையவர்பிரான்சிஸ்கோ சர்டின்கா
பின்னவர்பிரதாப்சிங் ரானே
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அருண் ஜெட்லி
பின்னவர்அருண் ஜெட்லி
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
28 ஆகத்து 2017 – 17 மார்ச் 2019
முன்னையவர்சித்தார்த் குன்கலின்கர்
தொகுதிபானஜி
பதவியில்
1994 – 25 நவம்பர் 2014
முன்னையவர்ஜோன் பட்டிஸ்தா புளோரினோ கன்சால்வுசு
பின்னவர்சித்தார்த் குன்கலின்கர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
26 நவம்பர் 2014 – 2 செப்டம்பர் 2017
முன்னையவர்குசும் ராய்
பின்னவர்ஹர்தீப் சிங் புரி
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்

(1955-12-13)13 திசம்பர் 1955
மப்பூசா, கோவா, போர்த்துகேய இந்தியா
(தற்போது கோவா, இந்தியா)
இறப்பு17 மார்ச்சு 2019(2019-03-17) (அகவை 63)
பானஜி, கோவா, இந்தியா
காரணம் of deathகணையப் புற்றுநோய் பாதிப்பால்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மேதா பாரிக்கர் (இறப்பு:1999)
பிள்ளைகள்அபிஜித் பாரிக்கர்
உத்பல் பாரிக்கர்
பெற்றோர்கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்
ராதாபாய் பாரிக்கர்
வாழிடம்(s)பானஜி, கோவா, இந்தியா
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை

2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பாரிக்கர் கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே "ஐஐடி"யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார்.[சான்று தேவை] மனோகர் பாரிக்கரும், நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.

அரசியல் வாழ்க்கை

தொகு

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரேந்திர மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.[7]

பின்னர் மார்சு 14, 2017 ஆம் ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்.

இறப்பு

தொகு

கணையப் புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 17, 2019 அன்று காலமானார்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Goa Election Result". Nationsroot Inc.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Archived copy". Archived from the original on 19 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Desk, Internet. "Manohar Parrikar to take oath as Goa CM tomorrow" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/manohar-parrikar-to-take-oath-as-goa-cm-tomorrow/article17455622.ece?homepage=true. 
  5. "Manohar Parrikar appointed as new Goa Chief Minister". தி எகனாமிக் டைம்ஸ். 14 March 2017.
  6. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்
  7. மனோகர் பாரிக்கர் ராஜினாமா: கோவா புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பதவியேற்பு
  8. "கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்". நக்கீரன் (17 மார்ச் 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_பாரிக்கர்&oldid=3587853" இலிருந்து மீள்விக்கப்பட்டது