வானூர் வட்டம்

வானூர் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வானூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 81 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டத்தில் வானூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கோட்டக்குப்பம் பேரூராட்சி உள்ளது.

மக்கள்தொகை தொகு

2011 கணக்கெடுப்பின் படி வானூர் வட்டத்தின் மக்கட்தொகை 196,282 பேர் ஆவர். இதில் 98,852 பேர் ஆண்கள் 97,430 பேர் பெண்கள். அங்கு 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் இருந்தனர். எழுத்தறிவு விகிதம் 68.73. 6 வயதிற்குக் குறைந்த குழந்தைகளின் மக்கட்தொகையில் 11,028 பேர் ஆண்கள், 10,647 பேர் பெண்கள்.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. வானூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. "Provisional Population Totals - Tamil Nadu-Census 2011" (PDF). Census Tamil Nadu. Archived from the original (PDF) on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்_வட்டம்&oldid=3571359" இலிருந்து மீள்விக்கப்பட்டது