மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்பது நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2]
மக்கள் நீதி மய்யம் | |
---|---|
சுருக்கக்குறி | மநீம |
தலைவர் | கமல்ஹாசன் |
நிறுவனர் | கமல்ஹாசன் |
தொடக்கம் | 21 பெப்ரவரி 2018 |
தலைமையகம் | 4, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா-600018 |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை[1] |
நிறங்கள் | சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை |
இ.தே.ஆ நிலை | அங்கீகரிக்கப்படாத கட்சி |
தேசியக் கூட்டுநர் | கமல்ஹாசன் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 0 / 234
|
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
மய்யம் |
தொடக்கம்தொகு
பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார்.[3][4] இந்தப் பொதுக்கூட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.[5] கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளிக் காட்சி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.[6]
கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டார்.[7]
கட்சியின் பொறுப்பாளர்கள்தொகு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக ஆர். மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இவர் 30 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளதாகவும், விவசாயத்துறையில் பயிர் சாகுபடி மற்றும் ஏற்றுமதியில் திறன் மிக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.[8]
அருணாச்சலம் பொதுச் செயலாளராகவும், சுகா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, கமிலா நாசர், செளரிராஜன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன் ஆகியோரை செயற்க் குழு உறுப்பினராக கமல் ஹாசன் அறிவித்தார்.[9]
கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைதொகு
கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார்.[10] தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.[11]
2019 பொதுத் தேர்தலில்தொகு
கமல்ஹாசன் 2019 ஆண்டு இந்திய பொதுத் தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிக்கு 40 பேர் கொண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்களை வெளியிட்டார். இதில் பெரம்பலூர் தொகுதி மநீம வேட்பாளர் அருள்பிரகாசம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி இந்தியக் குடியரசுக் கட்சி (கூட்டணிக் கட்சி) வேட்பாளர் தங்கராஜ் ஆகியோரின் வேட்புமனு தாக்குதல் நிராகரிக்கப்பட்டது.
சான்றுகள்தொகு
- ↑ "கட்சிக்கொடி என்.சி.ஓ. போல் இருந்தால் என்ன தவறு? விளக்கும் கமல்ஹாசன்". (22 பெப்ரவரி, 2018), நக்கீரன்.
- ↑ "'மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு", The Hindu Tamil, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "மதுரையில் பிறந்தது கமலின் புதுக் கட்சி... மக்கள் நீதி மையம்!", https://tamil.oneindia.com, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது External link in
|journal=
(உதவி) - ↑ "மக்கள் நீதி மையம் - கமல் கட்சியின் பெயர்", Dinamalar, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ ""நிஜ கதாநாயகனாகத் திகழ்கிறார்": கமலுக்கு கெஜ்ரிவால் புகழாரம்", BBC News தமிழ் (in ஆங்கிலம்), 2018-02-22, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "ஜனநாயகத்தைக் கமல் காப்பார் - பினராயி விஜயன் வாழ்த்து!", nakkheeran (in ஆங்கிலம்), 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "மக்கள் நீதி மய்யம்.. தமிழகம் விழித்தெழட்டும்.. டிவிட்டரிலும் அறிமுகப்படுத்திய கமல்!", https://tamil.oneindia.com, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது External link in
|journal=
(உதவி) - ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2156713
- ↑ "'மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு", The Hindu Tamil, 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் கொள்கை என்ன? கமல் விளக்கம்!", nakkheeran (in ஆங்கிலம்), 2018-02-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "கமல் கட்சியின் சின்னம் 'பேட்டரி டார்ச் '". தினமலர் (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.