காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (Kancheepuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

காஞ்சிபுரம்
Kancheepuram lok sabha constituency (Tamil).png
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1951
2009-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்ஜி. செல்வம்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,79,856[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (ஒரு முறை)
சட்டமன்றத் தொகுதிகள்32. செங்கல்பட்டு
33. திருப்போரூர்
34. செய்யூர் (தனி)
35. மதுராந்தகம்
36. உத்திரமேரூர்
37. காஞ்சிபுரம்

தொகுதி மறுசீரமைப்புதொகு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் (2009), காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.

சட்டமன்ற தொகுதிகள்தொகு

இம்மக்களவைத் தொகுதியில், மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. செங்கல்பட்டு
  2. திருப்போரூர்
  3. செய்யூர் (தனி)
  4. மதுராந்தகம்
  5. உத்திரமேரூர்
  6. காஞ்சிபுரம்

வென்றவர்கள்தொகு

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1951 ஏ. கிருஷ்ணசாமி காமன்வீல் கட்சி டி. செங்கல்வராயன் இதேகா
2009 பி. விஸ்வநாதன் இதேகா இ. இராமகிருஷ்ணன் அதிமுக
2014 கே. மரகதம் அதிமுக க. செல்வம் திமுக
2019 க. செல்வம்[2] திமுக கே. மரகதம் அதிமுக

வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,36,808 7,42,874 174 14,79,856 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.24% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 75.91% 1.67% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தொகு

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் பி. விஸ்வநாதன், அதிமுகவின் இ. இராமகிருட்டிணனை, 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து காஞ்சீபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. விஸ்வநாதன் காங்கிரசு 3,30,237
இ. இராமகிருட்டிணன் அதிமுக 3,17,134
டி. தமிழ்வேந்தன் தேமுதிக 1,03,560
கே. உத்திரபதி பகுஜன் சமாஜ் கட்சி 5,663

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. மரகதம் அதிமுக 4,99,395
ஜி. செல்வம் திமுக 3,52,529
மல்லை சத்யா மதிமுக 2,07,080
விஸ்வநாதன் இதேகா 33,313

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
12,37,612[4]

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இத்தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, கே. மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
ஜி. செல்வம்   திமுக 6,84,004 55.27%
கே. மரகதம்   அதிமுக 3,97,372 32.11%
சிவரஞ்சினி   நாம் தமிழர் கட்சி 62,771 5.07%
முனுசாமி   அமமுக 55,213 4.46%
சேகர்   பகுஜன் சமாஜ் கட்சி 5,018 0.41%
நோட்டா - - 21,661 1.75%

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India (25 May 2019). பார்த்த நாள் 2 June 2019.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 10 August 2019.

வெளியிணைப்புகள்தொகு