க. செல்வம்
ஜி. செல்வம் (G. Selvam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வாழ்க்கை வரலாறு
தொகுஇவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள சிறுவேடலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை கணேசன், தாயார் நாகம்மாள் என்பவர்களாவர். [2]இவரும் திமுகவைச் சேர்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு சகீலா என்னும் மனைவியும், ஆராதனா, சுருதி என இருமகள்களும் உள்ளனர்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 1996 ஆண்டில் வாலாஜாபாத் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1997 ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு 2008 ஆம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2008 முதல் 2012 வரை மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளராக இருந்தார். தற்போது வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலராக இருக்கிறார்.
இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரான மரகதம் குமரவேல் என்பவரிடம் தோல்வி அடைந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காஞ்சிபுரம் (தனி): திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
- ↑ "காஞ்சிபுரம் தி.மு.க வேட்பாளர் க. செல்வம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2024/Mar/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 11 June 2024.
- ↑ "காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி. செல்வம்: இளமையை திமுகவுக்காக செலவிட்டவர்". ஒன்இந்தியா (மார்ச் 11, 2014)