க. காமராஜ்
கலிதீர்த்தான் காமராஜ் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக கள்ளக்குறிச்சி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கபட்டார்.
மரு. க. காமராஜ் | |
---|---|
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
தொகுதி | கள்ளக்குறிச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மே 1965 தமிழ்நாடு, விழுப்புரம், திருக்கோயிலூர் |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | கா.வசந்தபிரியா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | தமிழ்நாடு விழுப்புரம் |
முன்னாள் கல்லூரி | மதராசு மருத்துவக் கல்லூரி |
வேலை | மருத்துவர் |
As of 17 திசம்பர், 2016 மூலம்: [1] |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகமராஜ் 1966 சூலை 7 ஆம் நாள் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கரபுரம் வட்டத்தில் உள்ள சோமந்தர்குடி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை எஸ். கலிதீர்த்தன் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக (1980 மற்றும் 1985) தேர்ந்தெடுக்கபட்டார். இவரது தாய் பிச்சை அம்மாள்.
கமராஜ் மடூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து. பின்னர் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள சர் எம். சி. டி. எம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். 1984 இல் மதராசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இவர், 1989 இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மருத்துவராக ஆனார்.
பயிற்சி மருத்துவராக ஒரு ஆண்டு பணியாற்றியபின்னர், காமராஜ் 1992 இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர்ந்து, 1994 இல் பொது அறுவை மருத்துவத்தில் (எம்.எஸ்) முதுகலைப் பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மெக்ராத் இன்ஸ்டிடியூட் ஆப் லீடர்ஷிப் டிரெயினிங் நடத்திய மில்ட் லீடர்ஷிப் படிப்பையும் முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஅரசியலில் இவர் நுழைந்தது சுகாதாரத்துறையில் இவரது சமூகப் பணிகளின் இயல்பான நீட்சியாகும். மேலும் இவர் ஊரக இந்திய அறுவை மருத்துவ நிபுணர் சங்கத்தின் தீவிர உறுப்பினராக உள்ளார். அதிமுகவில், காமராஜ் மாவட்ட மருத்துவரணியின் செயலாளராக இருந்தார். விழுப்புரம் (கிழக்கு) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய உதவியதுடன், 2012 பெப்ரவரி 26 அன்று ஒரு பெரிய சுகாதார மற்றும் இரத்த தான முகாம், மற்றும் 2013 மார்ச் 3 அன்று இதய பரிசோதனை முகாம்களையும் நடத்தினார்.
2014 ஏப்ரல் பொதுத் தேர்தலில் கள்ளகுறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக காமராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மருத்துவர் க. காமராஜ் அதிமுக மக்களவை கட்சியின் செயலாளராக இருந்தார். மேலும் இவர் அதிமுக மக்களவை கட்சி கொறடாவாக இருந்தார்.
பதவிக்காலம் | வகித்த பதவிகள் |
---|---|
2014- | உறுப்பினர், பதினாறாவது மக்களவை
உறுப்பினர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கான நிலைக்குழு உறுப்பினர், ஆலோசனைக் குழு, வெளிவிவகார அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்கள் |