டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: மே 9, 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.

விஜய டி. ராஜேந்தர்
VijayaTR.JPG
விஜய டி. ராஜேந்தர்
பிறப்பு மே 9, 1955 (1955-05-09) (அகவை 66)
மயிலாடுதுறை[1]
வேறு பெயர் டி. ஆர்
தொழில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளார், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1980 லிருந்து தற்போது வரை
துணைவர் உசா ராஜேந்தர்
பிள்ளைகள் சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா

டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

அரசியல் வாழ்க்கைதொகு

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.[2][3]

திரைப்பட பட்டியல்தொகு

ஆண்டு திரைப்படம் திரைப்பட பங்களிப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
இயக்குனர் எழுத்து நடிகர் இசை & வரிகள் தயாரிப்பாளர்
1980 ஒரு தலை ராகம்  Y  Y  Y  Y  N கௌரவத் தோற்றம்
1980 வசந்த அழைப்புகள்  Y  Y  Y கௌரவத் தோற்றம்
1981 இரயில் பயணங்களில்  Y  Y  Y  Y  N கௌரவத் தோற்றம்
1981 கிளிஞ்சல்கள்  N  N  N  Y  N
1982 நெஞ்சில் ஒரு ராகம்  Y  Y  Y கௌரவத் தோற்றம்
1982 சட்டம் சிரிக்கிறது  N  N  N  Y  N
1982 ராகம் தேடும் பல்லவி  Y  Y  Y கௌரவத் தோற்றம்
1983 தங்கைக்கோர் கீதம்  Y  Y  Y  Y  Y சூலக்கருப்பன் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
1983 உயிருள்ளவரை உஷா  Y  Y  Y  Y  Y
1984 உறவை காத்த கிளி  Y  Y  Y  Y  N
1985 உனக்காக ஒரு ரோஜா  Y
1985 எங்கள் குரல்  Y
1986 பூக்களை பறிக்காதீர்கள்  Y
1986 மைதிலி என்னை காதலி  Y  Y  Y  Y  Y மாணிக்கம்
1987 கூலிக்காரன்  Y
1987 இவர்கள் வருங்காலத் தூண்கள்  N  N  N  Y  N
1987 முத்துக்கள் மூன்று  N  N  N  Y  N
1987 பூ பூவா பூத்திருக்கு  Y
1987 ஒரு தாயின் சபதம்  Y  Y  Y  Y  Y
1987 பூக்கள் விடும் தூது  Y  Y
1987 ஆயிசு நூறு  Y
1988 என் தங்கை கல்யாணி  Y  Y  Y  Y  Y வேலு
1989 சம்சார சங்கீதம்  Y  Y  Y  Y  Y
1991 சாந்தி எனது சாந்தி  Y  Y  Y  Y  Y
1992 எங்க வீட்டு வேலன்  Y  Y  Y  Y
1993 பெற்றெடுத்த பிள்ளை  Y  Y  Y
1993 சபாஷ் பாபு  N  Y  Y  Y  N வேலுச்சாமி
1994 ஒரு வசந்த கீதம்  Y  Y  Y  Y  N
1995 தாய் தங்கை பாசம்  Y  Y  Y  Y  Y
1996 என் ஆசை தங்கச்சி  Y
1996 பொம்பள சிரிச்சா போச்சு  N  N  N  Y  N
1999 மோனிசா என் மோனோலிசா  Y  Y  Y  Y  Y காதல்தாசன்
2001 சொன்னால் தான் காதலா  Y  Y  Y  Y  Y டி. ஆர்.
2002 காதல் வைரஸ்  N  N  Y  N  N விருந்தினர் தோற்றம்
2002 காதல் அழிவதில்லை  Y  Y  Y  Y  Y வக்கீல் தாதா முன்னணி கதாநாயகனாக சிலம்பரசனின் அறிமுகம்
2002 ஸ்ரீ பண்ணாரி அம்மன்  N  N  N  Y  N
2006 வல்லவன்  N  N  Y  N  N விருந்தினர் தோற்றம்
2007 வீராசாமி  Y  Y  Y  Y  Y வீரசாமி
2013 ஆர்யா சூர்யா  N  N  Y  N  N "தகடு தகடு" பாடலில் விருந்தினர் தோற்றம்
2016 இது நம்ம ஆளு  N  N  N  N  Y
2017 கவண்  N  N  Y  N  N மயில்வாகனன்
2017 விழித்திரு  N  N  Y  N  N "பப்பரப்பா" பாடலில் விருந்தினர் தோற்றம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜேந்தர்&oldid=3326783" இருந்து மீள்விக்கப்பட்டது