சொன்னால் தான் காதலா

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சொன்னால் தான் காதலா (Sonnal Thaan Kathala) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர், முரளி, ரோஜா, கரன், லிவிங்ஸ்டன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். சிலம்பரசன் ராஜேந்தர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். டி. ராஜேந்தர் இப்படத்தை எழுதி, இயக்கி, இசை அமைத்து, தாயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் தொகு

டி. ராஜேந்தர், முரளி, ரோஜா, கரன், வடிக்கரசி, மணிவண்ணன், வடிவேலு, குறளரசன், கோவை சரளா, ராஜஸ்ரீ, லிவிங்ஸ்டன், குஷ்பூ, எம். என். நம்பியார், ஸ்வாதி, விஜயா, வெண்ணிறாடை மூர்த்தி, புவனேஸ்வரி, ராஜீவ், பாண்டு, இடிச்சப்புளி செல்வராஜ், மும்தாஜ், சார்லீ, மதன் பாப், அணு மோகன், தாமு, வி. கே. ராமசாமி, வையாபுரி, சிம்பு.

கதைச்சுருக்கம் தொகு

ரோஜா (ரோஜா செல்வமணி) ஒரு முன்னணி பாடகி ஆவார். குடி பழக்கத்திற்கு அடிமையான தந்தை (மணிவண்ணன்), மூன்று தங்கைகள், தாய், தம்பி ஆகியோருடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வரும் ரோஜா, ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரோஜா சம்மந்தப்பட்டிருக்கும் வழக்கு ஒன்றை விசாரிக்கிறார் டி.ஆர். (டி. ராஜேந்தர்). ரோஜாவுடன் வேலை செய்யும் முரளி (முரளி (தமிழ் நடிகர்)) அவளை விரும்புகிறான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி காதலை வெளிப்படுத்துகிறான். ஆனால், முரளியின் காதலை உதாசீணப்படுத்துகிறாள்..

டி. ஆருக்கு சரோ (ஸ்வாதி) எனும் ஒரு தங்கை இருக்கிறாள். சரோவின் கணவர், இன்பராஜ் (கரண்) ஒரு ஊழல் காவல் அதிகாரி. இன்பராஜின் ஊழலைப் பற்றி ஊடகங்களில் டி. ஆர் அம்பலப்படுத்தியதால் கோபம் கொண்ட இன்பராஜ், டி. ஆரின் தங்கையை தன் தாயுடன் சேர்ந்து கொண்டு துன்புறுத்துகிறான்.

தன் பெரிய குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிகவும் கடினப்படுகிறாள் ரோஜா. அந்நிலையில், முரளியின் காதலை ஒப்புக்கொள்ளுமாறு ரோஜாவிற்கு அறிவுறுத்துகிறார் டி. ஆர். இறுதியில், முரளியின் காதல் என்னவானது? ரோஜாவின் வழக்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.[1]

ஒலிப்பதிவு தொகு

2001 ஆம் ஆண்டு வெளியான 8 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பை டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[2]

வரவேற்பு தொகு

பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி இல்லையென்றாலும், பாடல்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டில், தமிழ் நாடு மாநிலத் திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருது ஆகிய இரு விருதுகளை இப்படம் வென்றது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "www.chennaionline.com" இம் மூலத்தில் இருந்து 2001-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010707032557/http://www.chennaionline.com/Moviereviews/tammov121.asp. 
  2. "www.musicindiaonline.com" இம் மூலத்தில் இருந்து 2007-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070307122246/http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5321/music_director.1125/. 
  3. "www.musicindiaonline.com" இம் மூலத்தில் இருந்து 2008-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081222085109/http://www.musicindiaonline.com/n/i/tamil/824/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொன்னால்_தான்_காதலா&oldid=3708623" இருந்து மீள்விக்கப்பட்டது