ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈ. எம். இப்ராகிமின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒரு தலை ராகம்
இயக்கம்ஈ. எம். இப்ராகிம்
தயாரிப்புஈ. எம். இப்ராகிம்
கதைடி. ராஜேந்தர்
திரைக்கதைமன்சூர் கிரியேசன்சு
இசைடி. ராஜேந்தர்
ஏ. ஏ. ராஜ் (பின்னணி இசை)
நடிப்புசங்கர்
தியாகு
சந்திரசேகர்
உஷா ராஜேந்தர்
ரூபா
ரவீந்திரன்
ஒளிப்பதிவுராபர்ட்
ராஜசேகரன்
படத்தொகுப்புடி. ராஜ்
கலையகம்மன்சூர் கிரியேசன்சு
விநியோகம்மன்சூர் கிரியேசன்சு
வெளியீடுமே 2, 1980 (1980-05-02)
ஓட்டம்145 நிமி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் பஞ்சதாரா சிலக்கா என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்தொகு

மாயவரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்புபடிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் இராஜா சேர்கிறான். கல்லூரிக்கு இரயில் வழியாக நன்பர்களுடன் இராஜா சென்றுவருகின்றனர். அதே தொடர்வண்டியில் பயணிக்கும் உடன் கல்லூரியில் படிக்கும் அடக்கம்மிக்க சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல்கொள்கிறான். சுபத்திராவும் இராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச்சூழலால் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தன் காதலை சுபத்திராவிடம் இராஜா தெரிவித்தும், அனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகி செல்கிறாள். தன் காதலுக்கு விடை தெரியாத இராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான். கல்லூரியின் கடைசி நாளில் இராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும்விதமாக பேசுகிறான். இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் தொடர் வண்டியில் இராஜாவிடம் தன் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கும் இராஜாவைத் தொடும்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள்.

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்தின் பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி, இசையமைத்திருந்தார். ஏ. ஏ. ராஜ் பின்னணி இசையை வழங்கியிருந்தார்.[2]

பாடல் பாடியவர்(கள்) இயற்றியவர் நீளம்
என் கதை டி. எம். சௌந்தரராஜன் டி. ராஜேந்தர் 3.24
இது குழந்தை பாடும் தாலாட்டு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4.38
கடவுள் வாழும் பி. ஜெயச்சந்திரன் 5.00
கூடையிலே கருவாடு மலேசியா வாசுதேவன் 3.25
மன்மதன் ஜாலி ஏபிரகாம் 4.13
நான் ஒரு ராசியில்லா ராஜா டி. எம். சௌந்தரராஜன் 4.24
வாசமில்லா மலர் இது எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4.48

மேற்கோள்கள்தொகு

  1. Baradwaj Rangan (2013). Conversations with Mani Ratnam. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184756906. https://books.google.co.in/books?id=7_d9XHAUFB8C&pg=PT79. 
  2. P. S. Gopalakrishna (23 January 2014). "In reference to film music". தி இந்து. பார்த்த நாள் 25 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_தலை_ராகம்&oldid=2800414" இருந்து மீள்விக்கப்பட்டது