ரூபா
ரூபா (பிறப்பு 7 நவம்பர் 1960) ரூபா தேவி என்றும் அறியப்படுபவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் மூத்த நடிகையான அத்வானி லட்சுமி தேவியின் மகளாவார். இவர் தமிழில் 365 நாட்கள் ஓடிய ஒரு தலை ராகம் என்ற சோகமான காதல் சித்திரத்தில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். அதில் இவர் புதுமுகம் ஷங்கருடன் ஜோடியாக நடித்தார்.[1]
ரூபா | |
---|---|
பிறப்பு | 7 நவம்பர் 1960 ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
மற்ற பெயர்கள் | ரூபா தேவி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1980–1990 2005–தற்போது வரை |
பெற்றோர் | அத்வானி லட்சுமி தேவி (தாய்) இராமைய்ய (தந்தை) |
வாழ்க்கைத் துணை | மது மகங்கலி |
பிள்ளைகள் | 1 |
தொழில்
தொகுதேவி 1980 களில் முதன்மையாக கன்னட திரைப்படங்களில் பணியாற்றினார். இவர் 1979 ஆம் ஆண்டில் கமலா என்ற சோதனை திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்ற பாலியல் தொழிலாளியின் பாத்திரம் பரந்த அளவில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1980 ஆம் ஆண்டில் சிம்ஹா ஜோடி படத்தின் வழியாக வணிக திரைப்படத்தில் நுழைந்தார், அதில் விஷ்ணுவர்தனின் சகோதரி வேடத்தில் நடித்தார். 1983-87 காலப்பகுதியில் கன்னட திரைப்படங்களில் இரண்டாவது நாயகி மற்றும் துணை வேடங்களுக்கு இவர் முதல் தேர்வாக இருந்தார். இவரது பிரதான கன்னடத் திரைப்படங்ளாக ஹாலு ஜேனு, முள்ளின குலாபி, பந்தனா, அவள அந்தரங்கா, மரலி குடிகே, திரிசூலா, அகுதி, தர்மா, பாலா நௌகே ஆகியவை அடங்கும். அவள அந்தரங்கா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு திரைப்பட விருதை (1984–85) பெற்றார்.[சான்று தேவை]
இவரது காலத்தில் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான ராஜ்குமார், கல்யாண் குமார் , விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், அம்பரிஷ், அனந்த் நாக், சங்கர் நாக், லோகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஹாலு ஜேனு, சமயதா கோம்பே, யாரிவனு ஆகியவற்றில் ராஜ்குமருடன் ஜோடியாக நடித்தார், இவை அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. 1989 க்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்குபோட்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் கங்கா காவேரி படத்தின் வழியாக வெள்ளித்திரைக்குத் திரும்பினார். 2011 ஆம் ஆண்டில் துனியா விஜய்யின் தாயாக ஜராசந்தா படத்தில் நடித்தார்.[2][3]
ரூபா தேவி மற்றும் அவரது தாயார் அத்வானி லட்சுமி தேவி ( ஸ்ரீ ராமஞ்சநேய யுத்தா ) இருவருடனும் நாயகனாக நடித்த பெருமையை ராஜ்குமார் பெற்றுள்ளார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு | |
---|---|---|---|---|---|
1978 | நாளாகா எந்தரோ | தெலுங்கு | சிறந்த நடிகைக்கான நந்தி விருத் | ||
1979 | காளி கோயில் கபாலி | தமிழ் | |||
1979 | பக்கா குள்ளா | கன்னடம் | |||
1979 | கமலா | கன்னடம் | |||
1980 | ஒரு தலை ராகம் | சுபத்திரா | தமிழ் | ||
1980 | தீக்கடல் | மலையாளம் | |||
1980 | ஹிருதயம் பாடுண்ணு | மலையாளம் | |||
1980 | அந்தரங்கம் ஊமையானது | ரதி | தமிழ் | ||
1980 | அம்பலவிளக்கு | கீதா | மலையாளம் | ||
1980 | பாப்பு | அவாகவே | மலையாளம் | ||
1980 | வசந்த அழைப்புகள் | தமிழ் | |||
1980 | சிக்ஹ ஜோடி | கன்னடம் | ஏ. ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளார் | ||
1981 | சினேகம் ஓரு பிரவாகம் | மலையாளம் | |||
1981 | அம்பாள்பூவு | மலையாளம் | |||
1981 | வழிகள் யாத்ரக்கர் | மலையாளம் | |||
1981 | மயில் | தமிழ் | |||
1981 | ஆடுகள் நனைகின்றன | தமிழ் | |||
1981 | கண்ணீர் பூக்கள் | தமிழ் | |||
1981 | ஆம்பல்பூவு | மலையாளம் | |||
1981 | அவசரக்காரி | தமிழ் | |||
1981 | மவுனயுத்தம் | தமிழ் | |||
1981 | எங்கம்மா மகாராணி | தமிழ் | |||
1981 | அன்று முதல் இன்று வரை | தமிழ் | |||
1982 | எச்சில் இரவுகள் | Tamil | |||
1982 | எனிக்கம் ஒரு திவாசம் | மோலிக்குட்டி | மலையாளம் | ||
1982 | கனவுகள் கற்பனைகள் | தமிழ் | |||
1982 | ஹாலு ஜேனு | மீனா | கன்னடம் | ||
1982 | முள்ளின குலாபி | ராதா | கன்னடம் | ||
1982 | ராகம் தேடும் பல்லவி | தமிழ் | |||
1982 | நடமாடும் சிலைகள் | தமிழ் | |||
1982 | புடி முச்சிடா கெண்டா | கன்னனடம் | |||
1982 | துணைவி | தமிழ் | |||
1982 | சிலந்திவலா | சாரதா | மலையாளம் | ||
1983 | பல்லாங்குழி | தேவு | மலையாளம் | ||
1983 | காயத்திரி மதுவே | கன்னடம் | |||
1983 | நியாயா கெட்டிட்டு | கன்னடம் | |||
1984 | பந்தனா | கன்னடம் | |||
1984 | சிவ கன்யே | கன்னடம் | |||
1984 | யாரிவனு | கன்னடம் | |||
1984 | அவள அந்தரங்கா | கன்னடம் | சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது | ||
1984 | பவித்ர பிரேமா | கன்னடம் | |||
1984 | மரியாதே மகாலு | கன்னடம் | |||
1984 | மராலி குடிகே | கன்னடம் | |||
1984 | சமயத கொம்பே | கன்னடம் | |||
1984 | மகா புருஷா | கன்னடம் | |||
1984 | யாரிவானு | கன்னடம் | |||
1985 | தர்மமா | கன்னடம் | |||
1985 | பெங்களூர் ராத்ரியள்ளி | கன்னடம் | |||
1985 | திரிசூலா' | கன்னடம் | |||
1985 | பெட்டத ஹூவு | சிறப்புத் தோற்றம் | கன்னடம் | ||
1985 | ஆகுதி | கன்னடம் | |||
1985 | கூடம் தேடி | Malayalam | |||
1986 | நெனபினா தோணி | கன்னடம் | |||
1986 | ரதசப்தமி | கன்னடம் | |||
1987 | சிவ பக்த மார்க்கண்டேயா | கன்னடம் | |||
1987 | ஜெகன்மாதா | Telugu | |||
1987 | பாலா நௌக் | கன்னடம் | |||
1988 | தாசி | தெலுங்கு | |||
1988 | சம்யுக்தா | கன்னடம் | |||
1989 | பத்ரசிட்டா[4] | மலையாளம் | |||
1989 | கண்டந்தரே கண்டு | கன்னடம் | |||
1990 | அப்பு[5] | மலையாளம் | |||
1994 | போலீஸ் அல்லுடு | தெலுங்கு | |||
2005 | கர்ணன சம்பத்து | கன்னடம் | 18 ஆண்டுகள் தாமதமானது | ||
2006 | கமலி | தெலுங்கு | |||
2008 | கங்கா காவேரி | கன்னடம் | |||
2010 | மத்தே முங்காரு | கன்னடம் | |||
2011 | ஜராசந்தா | கன்னடம் | |||
2012 | கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் | தெலுங்கு | |||
2015 | அசுரா | தெலுங்கு |
குறிப்புகள்
தொகு
- ↑ "Ninaithu Ninaithu Parthen's music is brilliant". rediff.com. 13 March 2007. http://inhome.rediff.com/movies/2007/mar/13ssnnp.htm. பார்த்த நாள்: 12 April 2010.
- ↑ "Jarasandha Movie Review-Deserved to be better". indiaglitz. 26 November 2011. http://www.indiaglitz.com/jarasandha-review-kannada-movie-review-13067. பார்த்த நாள்: 29 March 2015.
- ↑ "Review: Jarasandha is disappointing". rediff. 26 November 2011. http://www.rediff.com/movies/review/south-review-jarasandha-is-disappointing/20111125.htm. பார்த்த நாள்: 29 March 2015.
- ↑ http://www.malayalachalachithram.com/movieslist.php?a=6658
- ↑ http://www.malayalachalachithram.com/movie.php?i=2322