பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது (Pookkal Vidum Thudhu) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் இளம் பருவ காதல் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் ராஜன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் திரைக்கதை, இசையமைப்புப் பணிகளை டி. ராஜேந்தர் மேற்கொண்டார். மலையாளத்தில் வெளிவந்த நகக்‌ஷதங்கள் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இதில் மோனிசா உண்ணி, ஸ்ரீவித்யா, ஹரிஹரன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியானது.

பூக்கள் விடும் தூது
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர் ராஜன்
தயாரிப்புஸ்ரீதர் ராஜன்
திரைக்கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புமோனிசா உண்ணி
ஸ்ரீவித்யா
ஹரிஹரன்
ஒளிப்பதிவுசௌமெந்து ராய்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கலையகம்சிறீ சிவகரி பிலிம்சு
விநியோகம்சிம்பு சினி ஆர்ட்சு
வெளியீடு21 அக்டோபர் 1987 (1987-10-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

ஹரி தனது ஆதிக்க மாமாவின் பிடியில் இருந்து தப்பித்து கலைவாணியின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். அவர் கலைவாணியின் பணிப்பெண் கௌரியை காதலிக்கிறார். ஆனால் கலைவாணியின் காது கேளாத ஊமை மகளும் அவரை காதலிக்கிறார்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

பூக்கள் விடும் தூது, நகக்‌ஷதங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். ஸ்ரீதர் ராஜன் இயக்கிய மூன்றாவதான இறுதித் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத்தின் முன்னணி நடிகையான மோனிஷா தனது பாத்திரத்தை மீண்டும் செய்தார். முன்னணி நடிகர் ஹரிஹரனின் குரலுக்கு இரவிசங்கர் தேவநாராயணன் பின்னணி பேசியிருந்தார்.

பாடல்கள் தொகு

பாடல் வரிகளை டி. ராஜேந்தர் எழுதி இசையமைத்திருந்தார்.[2] [3] "கதிரவனைப் பார்த்து" பாடல் கர்நாடக இராகமான பௌலியில் அமைக்கப்பட்டது. [4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கதிரவனைப் பார்த்து"  கே. ஜே. யேசுதாஸ் 4:51
2. "இதமான இராகம்"  பி. சுசீலா 4:53
3. "மூங்கில் காட்டோரம்" (ஆண்குரல்)எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:38
4. "பூவும் பூவும்"  மனோ 4:31
5. "இளஞ்சிட்டு"  மலேசியா வாசுதேவன் 4:51
6. "மூங்கில் காட்டோரம்" (சோகம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:35
7. "பாடு பாட்டு"  கே. எஸ். சித்ரா 1:17
8. "மூங்கில் காட்டோரம்" (சோடிப் பாடல்)கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:20
9. "கால்கள் ஏறுது"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:43
மொத்த நீளம்:
34:39

வெளியீடும் வரவேற்பும் தொகு

பூக்கள் விடும் தூது 1987 அக்டோபர் 21 அன்று தீபாவளியின் போது வெளியிடப்பட்டது. சிம்பு சினி ஆர்ட்சு மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்தியன் எக்சுபிரசின் விமர்சகர் ஒருவர், "திரைப்படம் "சதுப்பு நிலம்" என்று எழுதியதுடன், "நகைச்சவை நடிகர்களின் ஆடம்பரமான வகைப்படுத்தல்" என்றும் "குறிப்பாக திரைப்படத்தை எங்கும் எடுத்துச் செல்லாத பாடல்களின் கண்மூடித்தனமான சலசலப்பு", என்றும் எழுதி மோனிஷாவிற்கு "அதிகாரம்", தமிழ்த் திரைப்படங்களில் புதுமுகம்", "நுட்பமான பாத்திரத்தில் ஹரிஹரன் சிறப்பாக நடித்தார். ஸ்ரீவித்யா ஒரு சில காட்சிகளில் அவருடைய தாதாவாக மிளிர்கிறார்". என்று கூறினார். மனிதன், நாயகன் உள்ளிட்ட தீபாவளி வெளியீடுகளிலிருந்து போட்டியை எதிர்கொண்ட போதிலும், இது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "City Entertainments". 2 November 1987. https://news.google.com/newspapers?id=tYRlAAAAIBAJ&sjid=tZ4NAAAAIBAJ&pg=1443%2C1468857. 
  2. "Pookkal Vidum Thoodhu (1987)Tamil Super Hit Film LP Vinyl Record by T.Rajendhar".
  3. "Pookkal Vidum Thudhu (Original Motion Picture Soundtrack)". 11 September 1987.
  4. Sundararaman. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music. Pichhamal Chintamani. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கள்_விடும்_தூது&oldid=3837807" இலிருந்து மீள்விக்கப்பட்டது