முதன்மை பட்டியைத் திறக்கவும்

நாயகன் (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கிய தமிழ் திரைப்படம்

நாயகன் 80 களில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் மணிரத்னம் ஆவார். கமலஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

நாயகன்
இயக்குனர்மணிரத்னம்
கதைமணிரத்னம்
வசனம்பாலகுமாரன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
சரன்யா
டெல்லி கணேஷ்
ஜனகராஜ்
நாசர்
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
வெளியீடு1987
கால நீளம்145 நிமிடம்
மொழிதமிழ்
ஹிந்தி

இது, மும்பையில் தாதாகவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

வகைதொகு

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே தந்தையை இழக்கும் சக்திவேல் பம்பாயில் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெரியவரினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகின்றார்.திடீரென அவர்கள் தங்கியிருந்த பகுதியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கொள்கையினை எதிர்க்கின்றார்.அவ்வாறு எதிரத்த அவரைக் காவல் துறையினரான ஹிந்தி மொழிக்காரனால் அடித்து சிறையில் அடைக்கப்படுகின்றார். பின்னர் வெளியில் வரும் வேலு தன் தந்தையின் கொலைக்குக் காரணமாக விளங்கிய அக்காவல் துறை அதிகாரையைக் கொலை செய்கின்றார்.பின்னர் அப்பகுதி மக்களுக்கு நாயகனாக விளங்குகின்றார் அனைவராலும் போற்றப்பாட்டு அப்பகுதியினரால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.சிறிது காலம் கழித்து விபச்சாரிகளின் இல்லத்திற்குச் செல்லும் வேலு அங்கு தவறுதலாக கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவியை அவர் விரும்பியபடி கணக்குப் பாடம் படிக்கச் செய்கின்றார்.பின்னர் அவரையே திருமணம் செய்தும் கொள்கின்றார்.அவ்வூர் மக்களுக்கு நல்ல செயல்களைச் செய்யும் வேலு நாயக்கர் பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகின்றார்.இதனைப் பார்க்கும் இவரின் மகள் அவரிடம் வாழப்பிடிக்காது அங்கிருந்து பிரிந்து செல்கின்றார்.வேலு நாயக்கரின் மகள் காதலித்து மணம் செய்யும் காவல் அதிகாரியால் வேலு நாயக்கர் வலைவீசித் தேடப்படுகின்றார்.இவரின் மீதிருந்த பற்றுதல் காரணமாக காட்டிக்கொடுக்க பொது மக்கள் மறுத்தனர்.திடீரென வரும் காவல் துறையினரிடம் இருந்து வேலு நாயக்கரைக் காப்பாற்றுவதற்காக வயது போன அம்மையார் தன்னை தீவைத்துக் கொளுத்தினார்.இதனைக் கண்டு மனம் நொந்த காவல் துறை அதிகாரி வேலு நாயக்கர் தன் மனைவியின் தந்தை எனத் தெரிந்து கொள்கின்றார்.பொது மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதைப் பார்த்த வேலு நாயக்கர் தானகவே சரணடைந்துவிடுவதாக தெரிவித்தார்.மேலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.இதனை அறிந்த பொது மக்கள் அவரின் விடுதலைக்காகக் காத்திருந்தனர்.அவரைக் கைது செய்யத் தேவைப்படும்படி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார்.மேலும் அவரினால் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரியின் மகனால் திடீரென சுட்டு வீழ்த்தப்படுகின்றார்.

விருதுகள்தொகு

1988 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - கமலஹாசன்
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பி.சி. சிறீராம்
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி

பிரபலமான வசனங்கள்தொகு

  • "நீங்க நல்லவரா கெட்டவரா"

அதற்கு கமலின் பதிலான “தெரியல” எனும் வார்த்தையும் சூழ்நிலைக்கேற்ற வசனமாக அமைந்தது.

  • நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல

வெளிச் சுட்டிகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகன்_(திரைப்படம்)&oldid=2705820" இருந்து மீள்விக்கப்பட்டது