மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் (மராத்தி: माधुरी दीक्षित) (மே 15, 1967 அன்று பிறந்த மாதுரி சங்கர் தீட்சித்) ஓர் இந்திய பாலிவுட் நடிகையாவார்.[2] 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஓர் பெயர் பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார்.[3] [4] இவர் பல வகையான வணிகரீதியான வெற்றிப்படங்களில் தோன்றியதோடு பல படங்கள் அவருடைய நடிப்புத் திறமைக்காகவும், நடனங்களுக்காகவும் பெயர் பெற்றன. ஊடகங்கள் மாதுரியை பாலிவுட்டின் மிகவும் முதன்மை நடிகையாக அடிக்கடி மேற்கோள் காட்டினர்.[5]
மாதுரி தீட்சித் | |
---|---|
![]() நச்சு பாலியே (2007) நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித். | |
இயற் பெயர் | மாதுரி சங்கர் தீட்சித் |
பிறப்பு | மே 15, 1967 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 1984–2002 2007 |
துணைவர் | சிறீராம் மாதவ் நேனே (1999–தற்காலம்)[1] |
பிள்ளைகள் | ரையான் ஆரின் |
பெற்றோர் | சங்கர் (அப்பா) சினேகலதா (அம்மா) |
உறவினர் | ரூபா (அக்கா) பாரதி (அக்கா) அசித் (அண்ணன்) |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமாதுரி தீட்சித் மும்பையைச் சார்ந்தவர். மராத்தி சித்பவன் பிராமண குடும்பத்தைச் சார்ந்த சங்கர் மற்றும் சினேகலதா தீட்சித்திற்கு பிறந்தார். அந்தேரியில் உள்ள டிவைன் சைல்ட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, பட்டப்படிப்பை முடிக்க மும்பைக்குச் சென்றார். இவருக்கு ரூபா, பாரதி என்ற இரண்டு மூத்த சகோதரிகளும் அசித் என்ற மூத்த சகோதரும் இருந்தனர்.
1999 ஆம் ஆண்டில், மாதுரி தீட்சித், டாக்டர் சிறீராம் மாதவ் நேனேவைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். இந்த இணையருக்கு ரையான், ஆரின் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6]
திரைப்படத் துறை
தொகுமாதுரி தீட்சித் 1984 இல் அபோத் (Abodh) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் வணிக அளவில் வெற்றி பெறவில்லை. அவரது அடுத்த படம் ஆவாரா பாப் (Awara Baap) (1985) வணிக அளவில் வெற்றி பெறவில்லை. 1986 இல் மாதுரி ஸ்வாதி (Swati), மானவ் ஹத்யா (Manav Hatya) ஆகிய படங்களில் நடித்தார். இவைகளும் வணிக அளவில் வெற்றி பெறவில்லை. 1987 ஆம் ஆண்டு மோக்ரா (Mohra), இஃபாசத் (Hifazat), உத்தர் தக்சின் (Uttar Dakshin) ஆகிய மூன்று படங்களில் அவர் நடித்தார், இவைகளும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, இவர் 1988 இல் தேசாப் (Tezaab) என்ற திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக இப்படம் மாறியது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் 34ஆவது சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகக்கான பரிந்துரையைப் பெற்றார். அதன்பிறகு, ராம் லகன் (Ram Lakhan), பிரேம் பிரதிக்யா (Prem Pratigyaa), திரிதேவ் (Tridev), பரிந்தா (Parinda ), தில் (Dil), சாசன் (Saajan), பேட்டா (Beta), மிருத்யுதண்ட் (Mrityudand), தில் தோ பாகல் கை (Dil Toh Pagal Hai) ஆகியன வணிக அளவில் பெரும் வெற்றி பெற்றன.[7][8][9] மாதுரி அவரது நடிப்புத் திறமைக்கு மட்டுமல்ல, அவரது நடனத்திறமைக்கும் பெயர் போனவர். பாலிவுட்டின் பிரபலமடைந்த திரைப்பட பாடல்களுக்கான அவளுடைய நடனமுறைகள், மிகவும் பெயர் பெற்றன. எடுத்துக்காட்டாக
படம் | பாடல் |
---|---|
தேஜாப் | ஏக் தோ தீன்[10] |
ராம் லகன் | படா துக் தீன்ஹ[11] |
பேட்டா | தக் தக் |
அன்ஜாமி | சனே கே கேத் மெயின் |
கல்நாயக் | சோலி கே பீச்சே |
ராஜா | அகியான் மிலாவுன் |
யாரானா | பியா கர் ஆயா |
புகாரி | கே சரா |
தேவதாஸ் | மார் டாலா |
போன்ற பாடல்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.
விருதுகள்
தொகுமே 10, 2008 அன்று புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடமிருந்து பத்மசிறீ விருதைப் பெற்றார் மாதுரி.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhuri Dixit's husband Shriram Nene shares new pictures from Ambani wedding". இந்தியன் Express. July 30, 2024. Retrieved 2024-10-02.
- ↑ "indiaFM". Wish Madhuri Dixit on her birthday today. 2008-05-15. Retrieved 2008-10-03.
- ↑ "Madhuri Dixit Biography". filmibeat. Retrieved 2024-10-03.
- ↑ Kumar, P.K. Ajith (6 December 2007). "Dancing to her tunes". The Hindu. Archived from the original on 2007-12-09. Retrieved 2009-05-30.
- ↑ "specials.rediff.com". Bollywood's Best Actress. Ever. Retrieved 4 January 2009.
- ↑ "Madhuri Dixit Biography". filmibeat. Retrieved 2024-10-03.
- ↑ "People used to say I can't make it big in B-town: Madhuri Dixit". India Today. 2013-06-05. Retrieved 2024-10-05.
- ↑ Bandyopadhyay, Zinia (2024-05-14). "Madhuri Dixit made her TV debut in 1985, first show was rejected by Doordarshan". India Today. Retrieved 2024-10-04.
- ↑ "List of awards and nominations received by Madhuri Dixit". Indian Express. 2024-05-15. Retrieved 2024-10-05.
- ↑ "Ek Do Teen". Times of India. 2019-05-15. Retrieved 2024-10-04.
- ↑ "Bada Dukh Dina Tere Lakhan Ne". Youtube. Retrieved 2024-10-04.
- ↑ Shankar (2008-05-10). "Padma Shree a Civilian Honour For Madhuri Dixit". Retrieved 2024-10-03.