தில்
தரணி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தில் (Dhill) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லைலா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தில் | |
---|---|
![]() | |
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் அஜய்குமார் |
கதை | பரதன் (உரையாடல்) |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விக்ரம் லைலா நாசர் விவேக் வையாபுரி பாண்டு மயில்சாமி |
ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
விநியோகம் | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 300 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விக்ரம் - கனகவேல்
- லைலா - ஆசா (குரல் ஸ்ரீஜா ரவி)
- ஆஷிஷ் வித்யார்த்தி - காவல் ஆய்வாளர் "என்கொன்டர்" சங்கர் (குரல் பு. ரவிசங்கர்)
- நாசர் - ஆர். மகேந்திரன், காவல் பயிற்சி தலைமை அதிகாரி
- பெப்சி விஜயன் - ஆதி பகவன்
- விவேக் - "சின்னத்திரை சிங்கம்" மெகா சீரியல் மகாதேவன், கனகவேலின் நண்பன்
- இராஜசேகர் - சுப்பிரமணியம், கனகவேலின் தந்தை
- கலைராணி - இலட்சுமி, கனவேலின் தாய்
- தீபா வெங்கட் - செல்வி, கனகவேலின் தங்கை
- மயில்சாமி - ஏழுமலை, கனகவேலின் நண்பன்
- பாண்டு - காவலர் சுடலைராசா
- வையாபுரி - உடுமலை, கனகவேலின் நண்பன்
- கீரிக்கடன் ஜோஸ் - அமைச்சர் வேதநாயகம்
- சாருஹாசன் - அமைச்சர் சுப்பையா
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - வழக்கரைஞர் பெருமாள்
- ஆர். என். ஆர். மனோகர்
- கிரேன் மனோகர் - மணி
- மாணிக்க விநாயகம்[1]
- அல்போன்சா ஒரு பாடல் நடனத்திற்காக ("மச்சான் மீசை")
இசை
தொகுதிரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். படத்திலுள்ள அனைத்து பாடல்களும் மிகவும் பிரலமடைந்தன. "அனைத்துப் பாடல்களுமே இசை ரசிகர்களைக் கவர்ந்தன" என்று இந்து தமிழ் திசை நாளிதழ் எழுதினர்.[2]
தில் | |||||
---|---|---|---|---|---|
பாடல்கள்
| |||||
வெளியீடு | 2001 | ||||
ஒலிப்பதிவு | 2001 | ||||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | ||||
நீளம் | 24:01 | ||||
இசைத்தட்டு நிறுவனம் | ஹிட் மியூசிக்ஸ் சரிகம | ||||
இசைத் தயாரிப்பாளர் | வித்தியாசாகர் | ||||
வித்தியாசாகர் காலவரிசை | |||||
| |||||
|
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "தில் தில்" | பா. விஜய் | டிம்மி, ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரஞ்சித் | 4:08 | ||||||
2. | "கண்ணுக்குள்ளே கெலுத்தி" | அறிவுமதி | மாணிக்க விநாயகம் | 4:45 | ||||||
3. | "மச்சான் மீசை" | பா. விஜய் | புஷ்பா ஆனந்த் | 4:51 | ||||||
4. | "ஓ நண்பனே" | அறிவுமதி | கார்த்திக், திப்பு, கே. எஸ். சித்ரா | 5:25 | ||||||
5. | "உன் சமையல் அறையில்" | கபிலன் | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் | 4:52 | ||||||
மொத்த நீளம்: |
24:01 |
வரவேற்பு
தொகு"வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் 'தில்' படத்தின் இளமைப் பொலிவு குலையவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்" என்று இந்து தமிழ் திசை நாளிதழ் எழுதினர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ M. Suganth (29 March 2020). "Paravai Muniyamma's innocence turned Dhool shoot into a fun experience: Director Dharani". The Times of India இம் மூலத்தில் இருந்து 11 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220711215229/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/paravai-muniyammas-innocence-turned-dhool-shoot-into-a-fun-experience-director-dharani/articleshow/74873364.cms.
- ↑ 2.0 2.1 "'தில்' வெளியாகி 20 ஆண்டுகள்: சீயான் விக்ரமை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம்". Hindu Tamil Thisai. 2021-07-13. Retrieved 2025-04-21.