மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மோனா லிசா
லியொனார்டோ டா வின்சி, circa 15031507
பொப்லாரில் எண்ணெய் வண்ணம்
77 × 53 cm, 30 × 21 inches
இலூவா அருங்காட்சியகம், பாரிஸ்

இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படமாக கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.

சித்திரத்தின் தலைப்பும் பொருளும்

தொகு

மோனா லிசா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ஓவியத்தின் தலைப்பு, கியோர்கியோ வசாரி அவர்கள் எழுதிய, "பிரான்சிஸ்கோ டெல் NNNNNகியோகாண்டோவின் மனைவி மோன லிசாவற்காக, லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம்" என்பதிலிருந்து புலனாகிறது[1][2]. மோனா என்ற பெயரானது, இத்தாலிய வழிச்சொல்லான "மடோனா" என்ற பெயரிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. மேலும் இப்பெயரானது, ஆங்கிலச் சொல்லான "மேடம்" என்பதற்கு ஒத்ததாகும். இந்த மடோனாவின் சுறுக்கமே, மோனா என்பதாகும். கவிஞர் வசாரியின் கூற்றுப்படி[1], இப்படத்தின் தலைப்பு மோனா என்றானது. பிற்காலத்தில் இப்பெயர் மருவி "மோனலிசா" என்றானது.

மோனா லிசா என்ற பெயர், வசாரி அவர்கள் 1550ல் வெளியிடப்பட்ட லியோனார்டோவின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் இறந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வோவியத்தின் மூலத்தை கண்டறிந்தனர். 1525ல்,லியொனார்டோவின் உதவியாளரான சாலை இறந்ததற்குப் பிறகு, "லா கியோகாண்டா" என்று பெயரிடப்பட்ட அவருடைய தனிப்பட்ட ஆவணங்களில், இந்த ஓவியம் "லியோனார்டோ மூலம் அவருக்கு வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் அனைத்தும் 2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழக அறிஞர் ஒருவரால், 1477ம் ஆண்டு ரோமனிய தத்துவவாதியான "சிசரோ" எழுதிய ஒரு தொகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. லியொனார்டோவின் சமகாலத்தவரான அகஸ்டினோ வெஸ்புசியின் ஏடுகளில் லியொனார்டோவைப் பற்றின குறிப்புகள் அடங்கியுள்ளன. அதில் அக்டோபர் மாதம் 1503ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியான லிசாவின் ஓவியத்தை தீட்டிக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.[3].

 
2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழக அறிஞர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட அகஸ்டினோ வெஸ்புசியின் ஏட்டில் குறிப்பிடப்பட்ட லிசா டெல் கியோகாண்டோவின் சித்திரப் பிரதிமை.

சித்திரத்தில் அமர்ந்திருக்கும் லிசா டெல் கியோகாண்டோ[4][5] என்பவர், பிளாரன்ஸ் மற்றும் டஸ்கானி அவர்களின் கிரார்தினி குடும்பத்தைச் சார்ந்தவரும், பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டு வர்த்தகரான பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியுமாவார்[6]. இந்த ஓவியத்தினை, தாங்கள் குடியேறும் புதிய வீட்டில் வைத்து, அவர்களது இரண்டாவது புதல்வனான ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தனர்[7]. லா கியோகாண்டா என்பது, இத்தாலிய மொழியில் "மகிழ்ச்சி தருவன" என பொருள்படும்[6][8]. பிரஞ்சு மொழியிலும் இப்பொருளே தரும்.

களவாடுதலும், அழித்தலும்

தொகு
 
1911ல் மோனலிசா ஓவியம் களவாடப்பட்ட சாலோன் காரே அருங்காட்சியகம்.

உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியமானது, விரோதிகிருது ஆண்டு ஆவணி மாதம், 5ம் நாள் (21 August 1911) கயவர்கள் சிலரால் திருடப்பட்டது[9]. திருடப்பட்ட மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காக, ஐந்தாண்டுகளாக தன்னகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சாலோன் காரே அருங்காட்சியத்திற்கு சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்கு பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக சித்திரத்தினை புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, சித்திரத்தினை புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது.

சித்திரம் இனி நமக்கு கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவு தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர் தான் களவாடினார் என்பது தெரிந்தது[8]. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையா, லியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும். மேலும், திருடிய இச்சித்திரத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் கிளர்ந்தான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இச்சித்திரத்தினை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார்[10]. இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் சித்திரத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்கு திரும்பியது, மோனா லிசா சித்திரம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது[11].

காட்சியகம்

தொகு

தாரண ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் நாளிற்கு (6 ஏப்ரல் 2005) பிறகு தொடர்ந்து வந்த நாட்களில் பராமரிக்கவும் பாதுகாக்கவும், சித்திரத்தை அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றினர். மேலும், காலநிலைக்கு ஏற்றார் போலும், குண்டு துளைக்காத கண்ணாடி மூலமாகவும் பராமரிக்கப்பட்டது[12]. 2005 ஆம் ஆண்டு வரை, ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்ட சித்திரம், அதற்கு பின்னர் வந்த காலங்களில், அதிக திறன் கொண்ட ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் தாக்கப்படா வண்ணம் வடிவமைத்தருந்தனர்[13]. காட்சியகம் பராமரிப்பிற்காக, சப்பானிய நிறுவனம் மூலம் நிதியுதவி பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[14]. இச்சித்திரத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர்[15].

மேற்கோள்கள்

தொகு
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 இத்தாலியம்: Prese Lionardo a fare per Francesco del Giocondo il ritratto di mona Lisa sua moglie(Vasari 1879, p. 39)
  2. Clark, Kenneth (March 1973). "Mona Lisa". The Burlington Magazine 115 (840): 144–151. பன்னாட்டுத் தர தொடர் எண்:00076287. 
  3. "Mona Lisa – Heidelberg discovery confirms identity". ஐடல்பேர்க் பல்கலைக்கழகம். Archived from the original on 8 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2010.
  4. "German experts crack the ID of ‘Mona Lisa’". MSN. 14 January 2008 இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080116210319/http://www.msnbc.msn.com/id/22652514/?GT1=10755. பார்த்த நாள்: 15 January 2008. 
  5. "Researchers Identify Model for Mona Lisa". The New York Times. http://www.nytimes.com/aponline/arts/AP-Art-Mona-Who.html. பார்த்த நாள்: 15 January 2008.  [தொடர்பிழந்த இணைப்பு]
  6. இங்கு மேலே தாவவும்: 6.0 6.1 (Kemp 2006, pp. 261–262)
  7. Farago 1999, ப. 123
  8. இங்கு மேலே தாவவும்: 8.0 8.1 (Bartz 2006, p. 626)
  9. "Theft of the Mona Lisa". Stoner Productions via Public Broadcasting Service (PBS). http://www.pbs.org/treasuresoftheworld/a_nav/mona_nav/main_monafrm.html. பார்த்த நாள்: 24 October 2009. 
  10. The Lost Mona Lisa by R. A. Scotti (Random House, 2010)
  11. "Top 25 Crimes of the Century: Stealing the Mona Lisa, 1911". TIME. 2 December 2007 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070303065050/http://www.time.com/time/2007/crimes/2.html. பார்த்த நாள்: 15 September 2007. 
  12. "Mona Lisa gains new Louvre home". BBC. 6 April 2005. http://news.bbc.co.uk/1/hi/entertainment/arts/4413303.stm. பார்த்த நாள்: 27 April 2008. 
  13. Fontoynont, Marc et al. "Lighting Mona Lisa with LEDs பரணிடப்பட்டது 2014-03-08 at the வந்தவழி இயந்திரம்" Note பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம். SBI / Aalborg University, June 2013.
  14. "Nippon Television Network Corporation". Ntv.co.jp. 6 April 2005. Archived from the original on 8 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2010.
  15. Chaundy, Bob (29 September 2006). "Faces of the Week". BBC. http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/5392000.stm. பார்த்த நாள்: 5 October 2007. 

பிற குறிப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  Leonardo's "Mona Lisa", Smarthistory

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_லிசா&oldid=4105533" இலிருந்து மீள்விக்கப்பட்டது