1503
1503 (MDIII) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1503 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1503 MDIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1534 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2256 |
அர்மீனிய நாட்காட்டி | 952 ԹՎ ՋԾԲ |
சீன நாட்காட்டி | 4199-4200 |
எபிரேய நாட்காட்டி | 5262-5263 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1558-1559 1425-1426 4604-4605 |
இரானிய நாட்காட்டி | 881-882 |
இசுலாமிய நாட்காட்டி | 908 – 909 |
சப்பானிய நாட்காட்டி | Bunki 3 (文亀3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1753 |
யூலியன் நாட்காட்டி | 1503 MDIII |
கொரிய நாட்காட்டி | 3836 |
நிகழ்வுகள்
தொகு- மே 10 - கொலம்பசு கேமன் தீவுகளைக் கண்டுபிடித்து, அங்கு பெருமளவு கடல் ஆமைகளைக் கண்டமையால் அத்தீவுகளுக்கு லாசு டோர்ட்டுகாசு என்ற பெயரிட்டார்.
- மே 13 - நாபொலி எசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.
- மே 20 - அசென்சன் தீவை முதற்தடவையாக போர்த்துக்கீசத் தளபதி அபோன்சோ டி ஆல்புர்கெக் என்பவர் கண்ணுற்றார்.[1]
- மே 28 - இசுக்கொட்லாந்து இராச்சியத்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு பத்து ஆண்டுகள் வரையே நீடித்தது.
- சூலை 23 - இந்நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்று வட்டத்துக்கு வெளியே வந்தது, அது அங்கு 233 ஆண்டுகள் வரை தங்கியிருந்தது.
- சூலை 30 - செயிண்ட் எலனா முதற்தடவையாக போர்த்துக்கீச மாலுமி எஸ்டேவோ டெ காமாவினால் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3][4]
- செப்டம்பர் 22 - மூன்றாம் பயசு 215வது திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் அக்டோபர் 18 இல் இறந்தார்.
- அக்டோபர் 30 - எசுப்பானியாவின் முதலாம் இசபெல்லா பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தடை விதித்தார்.
- அக்டோபர் 31 - இரண்டாம் யூலியசு 216வது திருத்தந்தையானார்.
- வாஸ்கோ ட காமா இந்தியாவின் முதலாவது போர்த்துக்கீசக் கோட்டையை கொச்சியில் அமைத்தார்.
- இங்கிலாந்தின் கேன்டர்பரி பேராலயம் 433 ஆண்டுகளின் பின்னர் கட்டி முடிக்கப்பட்டது.
- லியொனார்டோ டா வின்சி மோனா லிசாவை வரைய ஆரம்பித்தார்.
பிறப்புகள்
தொகு- டிசம்பர் 14 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
இறப்புகள்
தொகு- அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ascension History". Mysterra Magazine. Archived from the original on 2017-06-13. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.
- ↑ Schulenburg, A. H. (Spring 2002). "The discovery of St Helena: the search continues". Wirebird: the Journal of the Friends of St Helena 24: 13–19.
- ↑ Leite, Duarte (1960). História dos Descobrimentos. Vol. II. Lisbon: Edições Cosmos. p. 206.
- ↑ da Montalboddo, Fracanzio (1507). Paesi Nuovamente Retovati & Nuovo Mondo da Alberico Vesputio Fiorentino Intitulato. Venice.