அசென்சன் தீவு

7°56′S 14°22′W / 7.933°S 14.367°W / -7.933; -14.367

அசென்சன் தீவு
கொடி of அசென்சன் தீவின்
கொடி
நாட்டுப்பண்: God Save the Queen
அசென்சன் தீவின்அமைவிடம்
தலைநகரம்ஜார்ஜ் டவுன்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்செயிண்ட் எலனாவில் தங்கி்யுள்ள பகுதி
• நிர்வாகி
மைக்கல் இள்
நிறுவுதல்
• முதல் குடியிறுப்புகள்
1815
பரப்பு
• மொத்தம்
91 km2 (35 sq mi) (222வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• மதிப்பிடு
1,100 (n/a)
• 2016 கணக்கெடுப்பு
806[1]
நாணயம்செயிண்ட். எலனா பவுண்ட்
(அமெரிக்க டாலர் ஏற்றுக் கொள்ளப்படும்) (n/a)
நேர வலயம்ஒ.அ.நே+0 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்)
அழைப்புக்குறி247
இணையக் குறி.ac

அசென்சன் தீவு (Ascension Island) என்பது தெற்கு அட்லாண்டிக் கடலில் ஆபிரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து சுமார் 1000 மைல் (1600 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும். இது செயிண்ட். எலனாவில் இருந்து வடமேற்குத் திசையில் 800 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவு இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு (Ascension) திருவிழா நாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இத்தீவிற்கு இப்பெயர் வழங்கிற்று.

இத்தீவில் அமெரிக்க பிரித்தானிய வான்படைகளின் கூட்டுத்தளமான வைடவேக் வான்படைத்தளம் அமைந்துள்ளது. போக்லாந்து போரின் போது பிரித்தானிய இராணுவத்தால் இத்தீவு பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது. உலக அமைவிட முறைமைக்கான (GPS) மூன்று நில அண்டனாக்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.[2]

அசெசன் தீவு தனக்கான ஒரு சின்னத்தையோ கொடியையோ கொண்டிருக்கவில்லை, இங்கு பிரித்தானிய கொடியும் சின்னமும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census 2016 – summary report" (PDF). St Helena Government. June 2016. p. 9. Archived (PDF) from the original on 17 October 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
  2. "The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009". Archived from the original on 12 March 2010. பார்க்கப்பட்ட நாள் 26 September 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசென்சன்_தீவு&oldid=3656629" இலிருந்து மீள்விக்கப்பட்டது