புளூட்டோ
புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: [15] மற்றும்
[16]) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[h] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.
![]() புளூட்டோவின் வடக்கு அரைக்கோளம் (நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் 2015 எடுத்த படம்) |
|||||||
கண்டுபிடிப்பு
| |||||||
---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிளைட் டோம்பா | ||||||
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | லோவெல் வான்காணகம் | ||||||
கண்டுபிடிப்பு நாள் | பெப்ரவரி 18, 1930 | ||||||
பெயர்க்குறிப்பினை
| |||||||
சிறு கோள் பகுப்பு |
|
||||||
காலகட்டம்J2000 | |||||||
சூரிய சேய்மை நிலை |
|
||||||
சூரிய அண்மை நிலை | |||||||
அரைப்பேரச்சு |
|
||||||
மையத்தொலைத்தகவு | 0.2488 | ||||||
சுற்றுப்பாதை வேகம் | |||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 366.73 நாட்கள்[2] | ||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 4.743 கிமீ/செ[2] | ||||||
சராசரி பிறழ்வு | 14.53 ° | ||||||
சாய்வு |
|
||||||
Longitude of ascending node | 110.299° | ||||||
Argument of perihelion | 113.834° | ||||||
துணைக்கோள்கள் | 5 | ||||||
சிறப்பியல்பு
| |||||||
பரிமாணங்கள் | 2,376.6±1.6 கிமீ [b] | ||||||
சராசரி ஆரம் | |||||||
தட்டையாதல் | <1%[6] | ||||||
புறப் பரப்பு |
|
||||||
கனஅளவு |
|
||||||
நிறை | |||||||
அடர்த்தி | 1.854±0.006 கி/செமீ3[5][6] | ||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | |||||||
விடுபடு திசைவேகம் | 1.212 கிமீ/செ[f] | ||||||
சுழற்சிக் காலம் |
|
||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் |
|
||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 47.18 கிமீ/ம | ||||||
அச்சுவழிச் சாய்வு | 122.53° (to orbit)[2] | ||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 132.993°[8] | ||||||
வடதுருவ இறக்கம் | −6.163°[8] | ||||||
எதிரொளி திறன் | 0.49 முதல் 0.66 (வடிவியல், 35% மாறுபடுகிறது)[2][9] | ||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் |
| ||||||
தோற்ற ஒளிர்மை | 13.65[2] முதல் 16.3[10] (சராசரி 15.1)[2] |
||||||
விண்மீன் ஒளிர்மை | −0.7[11] | ||||||
கோணவிட்டம் | 0.06″ முதல் 0.11″[2][g] | ||||||
பெயரெச்சங்கள் | புளூட்டோனியன் /pluːˈtoʊniən/[12] | ||||||
வளிமண்டலம்
| |||||||
பரப்பு அழுத்தம் | 1.0 Pa (2015)[6][13] | ||||||
வளிமண்டல இயைபு | நைட்ரசன், மீத்தேன், கார்பனோராக்சைடு[14] |
கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[17]
வகைப்பாடுதொகு
கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள்
- கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.
- நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
- தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.
புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.
புளூட்டோவின் துணைக்கோள்கள்தொகு
கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.
பெயர் | கண்டுபிடித்த ஆண்டு | விட்டம் (கிலோமீட்டர்கள்) |
நிறை (நிலவின் கிலோகிராம்கள்) |
சுற்றாரம் (கிலோமீட்டர்கள்) |
சுற்றுக்காலம் (d) | பருமன் (mag) |
---|---|---|---|---|---|---|
புளூட்டோ | 1930 | 2,306 (66% நிலவு) |
1.305 ×1022 (18% நிலவு) |
2,035 | 6.3872 (25% நிலவு) |
15.1 |
சரோன் | 1978 | 1,205 (35% நிலவு) |
1.52 ×1021 (2% நிலவு) |
17,536 (5% நிலவு) |
6.3872 (25% நிலவு) |
16.8 |
எஸ் 2012 | 2012 | 10–25 | ? | ~42,000 +/- 2,000 | 20.2 +/- 0.1 | 27 |
நிக்சு | 2005 | 91 | 4 ×1017 | 48,708 | 24.856 | 23.7 |
எஸ் 2011 | 2011 | 13–34 | ? | ~59,000 | 32.1 | 26 |
ஐடுரா | 2005 | 114 | 8 ×1017 | 64,749 | 38.206 | 23.3 |
இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.
மூல நூல்தொகு
- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.
குறிப்புகள்தொகு
- ↑ இங்குள்ள சராசரிக் கூறுகள், IMCCE மூலம் வெளிக்கோள்களின் கோட்பாடு (TOP2013) தீர்வில் இருந்து பெறப்பட்டவை. அவை நிலையான சம இரவு நாள் J2000, சூரிய குடும்பத்தின் கனமையம் மற்றும் ஊழி J2000 ஆகியவற்றைக் குறிக்கின்றன.
- ↑ ஒரு கோளத்துடன் ஒத்துப்போகும் அவதானிப்புகள், அனுசரிக்க முடியாத அளவுக்கு சிறிய விலகல்கள் கணிக்கப்பட்டுள்ளன.[4]
- ↑ மேற்பரப்பளவு இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
- ↑ கனவளவு v, இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
- ↑ மேற்பரப்பு ஈர்ப்புவிசை இலிருந்து கணிக்கப்பட்டது. இங்கு G - புவியீர்ப்பு மாறிலி, m -திணிவு, r - ஆரை.
- ↑ விடுபடு திசைவேகம் √2Gm/r இலிருந்து கணிக்கப்பட்டது.
- ↑ தரவுத்தாளில், பூமி மற்றும் புளூட்டோ ஆரம் ஆகியவற்றிலிருந்து குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தூரத்தின் வடிவவியலின் அடிப்படையில்.
- ↑ புளூட்டோ எரிசு குறுங்கோளைப் போன்று கிட்டத்தட்ட அதே அளவானது, ஏறத்தாழ 2330 கிமீ, http://www.mikebrownsplanets.com/2010/11/how-big-is-pluto-anyway.html] ஆனால் 28% அதிக நிறையுடையது. எரிசு கைப்பர் பட்டையில் உள்ள ஒரு சிதறிய-வட்டத்தட்டுப் பொருள் ஆகும். சிதறிய பொருட்களைக் கருத்தில் கொள்ளாவிட்டால் கைப்பர் பட்டையில் உள்ள மிகப் பெரிய விண்பொருளாக புளூட்டோவைக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Simon, J.L.; Francou, G.; Fienga, A.; Manche, H. (September 2013). "New analytical planetary theories VSOP2013 and TOP2013". Astronomy and Astrophysics 557 (2): A49. doi:10.1051/0004-6361/201321843. Bibcode: 2013A&A...557A..49S. The elements in the clearer and usual format is in the spreadsheet and the original TOP2013 elements here.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 Williams, David R. (July 24, 2015). "Pluto Fact Sheet". NASA. August 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Horizon Online Ephemeris System for Pluto Barycenter". JPL Horizons On-Line Ephemeris System @ Solar System Dynamics Group. January 16, 2011 அன்று பார்க்கப்பட்டது. (Observer Location @sun with the observer at the center of the Sun)
- ↑ 4.0 4.1 Nimmo, Francis (2017). "Mean radius and shape of Pluto and Charon from New Horizons images". Icarus 287: 12–29. doi:10.1016/j.icarus.2016.06.027. Bibcode: 2017Icar..287...12N.
- ↑ 5.0 5.1 Stern, S. A.; Grundy, W.; McKinnon, W. B.; Weaver, H. A.; Young, L. A. (2017). "The Pluto System After New Horizons". Annual Review of Astronomy and Astrophysics 2018: 357–392. doi:10.1146/annurev-astro-081817-051935. Bibcode: 2018ARA&A..56..357S.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Stern, S. A. (2015). "The Pluto system: Initial results from its exploration by New Horizons". Science 350 (6258): 249–352. doi:10.1126/science.aad1815. பப்மெட்:26472913. Bibcode: 2015Sci...350.1815S.
- ↑ Seligman, Courtney. "Rotation Period and Day Length". June 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 8.0 8.1 "Report of the IAU Working Group on Cartographic Coordinates and Rotational Elements: 2009". Celestial Mechanics and Dynamical Astronomy 109 (2): 101–135. 2010. doi:10.1007/s10569-010-9320-4. Bibcode: 2011CeMDA.109..101A. http://astropedia.astrogeology.usgs.gov/alfresco/d/d/workspace/SpacesStore/28fd9e81-1964-44d6-a58b-fbbf61e64e15/WGCCRE2009reprint.pdf. பார்த்த நாள்: September 26, 2018.
- ↑ Hamilton, Calvin J. (February 12, 2006). "Dwarf Planet Pluto". Views of the Solar System. January 10, 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "AstDys (134340) Pluto Ephemerides". Department of Mathematics, University of Pisa, Italy. 2010-06-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "JPL Small-Body Database Browser: 134340 Pluto". June 12, 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Plutonian". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Amos, Jonathan (July 23, 2015). "New Horizons: Pluto may have 'nitrogen glaciers'". BBC News. https://www.bbc.com/news/science-environment-33657447. "It could tell from the passage of sunlight and radiowaves through the Plutonian "air" that the pressure was only about 10 microbars at the surface"
- ↑ "Pluto has carbon monoxide in its atmosphere". Physorg.com. April 19, 2011. November 22, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ JPL/NASA (2015-04-22). "What is a Dwarf Planet?". Jet Propulsion Laboratory. 2022-01-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ John Lewis, தொகுப்பாசிரியர் (2004). Physics and chemistry of the solar system (2 ). Elsevier. பக். 64.
- ↑ "(134340) Pluto". Hamilton.dm.unipi.it. AstDyS. 2011-11-22 அன்று பார்க்கப்பட்டது.