சூலை 31
நாள்
(ஜூலை 31 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான்.
- 781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.
- 1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.
- 1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
- 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
- 1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
- 1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
- 1712 – பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.
- 1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன.
- 1741 – புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.
- 1790 – முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
- 1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
- 1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1913 – பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
- 1932 – செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
- 1938 – கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.
- 1938 – பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சிமோலென்சுக் சண்டை முடிவுக்கு வந்தது. செருமனி 300,000 சோவியத் செஞ்சேனைப் படையினரைப் போர்கைதிகளாகப் பிடித்தனர்.[1]
- 1948 – இலண்டன், 1948 ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை ஓட்டப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த டங்கன் உவைட் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.[2]
- 1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
- 1964 – சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
- 1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
- 1972 – பிரித்தானிய இராணுவம் வட அயர்லாந்தின் ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
- 1973 – அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலையத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.
- 1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
- 1988 – மலேசியா, பட்டர்வொர்த் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.
- 1991 – ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
- 1992 – சியார்சியா ஐநாவில் இணைந்தது.
- 1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
- 1999 – நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.
- 2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
- 2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
- 2012 – மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.
- 2014 – தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்தனர்.
- 2022 – காபுல் நகரில் அல் காயிதா இயக்கத்தின் தலைவர் ஐமன் அழ்-ழவாகிரி அமெரிக்க ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
- 1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
- 1880 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
- 1902 – கே. சங்கர் பிள்ளை, இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
- 1907 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
- 1912 – மில்ட்டன் பிரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
- 1916 – மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
- 1919 – வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
- 1919 – ஹேமு அதிகாரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2003)
- 1923 – இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், கெவ்லார் இழையைக் கண்டுபிடித்தவர் (இ. 2014)
- 1936 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
- 1947 – மும்தாஜ், இந்தித் திரைப்பட நடிகை
- 1951 – சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
- 1961 – ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
- 1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
- 1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
- 1556 – லொயோலா இஞ்ஞாசி, இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491)
- 1805 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
- 1886 – பிரான்சு லிசித்து, அங்கேரிய இசையமைப்பாளர் (பி. 1811)
- 1940 – உதம் சிங், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899)
- 1944 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900)
- 1966 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1881)
- 1980 – முகம்மது ராபி, இந்தியப் பாடகர் (பி. 1924)
- 1989 – பிரேமகீர்த்தி டி அல்விஸ், இலங்கை சிங்கள ஊடகவியலாளர், பாடலாசிரியர் (பி. 1947)
- 1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
- 1997 – தங்கபாண்டியன், தமிழக அரசியல்வாதி
- 2000 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1918)
- 2014 – சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ Glantz, David M. (2010). Barbarossa Derailed: The Battle for Smolensk 10 July – 10 September 1941. Solihull, England: Helion & Company. p. 576. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-906033-72-2.
- ↑ "Principal Ceylon Events, 1948". Ferguson's Ceylon Directory, Colombo. 1949.