ரேஞ்சர் திட்டம்
ரேஞ்சர் திட்டம் (Ranger program) என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். ரேஞ்சர் விண்கலங்கள் தாம் எடுத்த படிமங்களை பூமிக்கு அனுப்பியவுடன், சந்திரனின் மேற்பரப்பில் மோதுமாறு வடிவமைக்கப்பட்டன. மொத்தம் 9 ரேஞ்சர் விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $170 மில்லியன்கள் ஆகும்.[1][2][3]
ரேஞ்சர் விண்கலம்
தொகுஒவ்வொரு ரேஞ்சர் விண்கலமும் தன்னுடன் ஆறு கமராக்கள் கொண்டு சென்றன.
- ரேஞ்சர் 1, ஆகஸ்ட் 23 1961 இல் ஏவப்பட்டது. ஏவல் தோல்வியடைந்தது.
- ரேஞ்சர் 2, நவம்பர் 18 1961 இல் ஏவப்பட்டது. ஏவல் தோல்வியடைந்தது.
- ரேஞ்சர் 3, ஜனவரி 26 1962 இல் ஏவப்பட்டது. சந்திரனை அடையவில்லை.
- ரேஞ்சர் 4, ஏப்ரல் 23 1962 இல் ஏவப்பட்டது. விண்கலம் சேதமடைந்தது.
- ரேஞ்சர் 5, அக்டோபர் 18 1962 இல் ஏவப்பட்டது. சந்திரனை அடையவில்லைஇ.
- ரேஞ்சர் 6, ஜனவரி 30 1964, கமராக்கள் இயங்கவில்லை.
- ரேஞ்சர் 7
- ரேஞ்சர் 8
- பெப்ரவரி 17 1965 இல் ஏவப்பட்டது.
- பெப்ரவரி 20 1965 இல் சந்திரனுடன் மோதியது.
- ரேஞ்சர் 9
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Cortright Oral History (p25)
- ↑ Dick, Steven J. "NASA's First 50 Years: Historical Perspectives" (PDF). history.nasa.gov. NASA. p. 12. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ "LUNAR IMPACT: A History of Project Ranger, Part I. The Original Ranger, Chapter Two - ORGANIZING THE CAMPAIGN". NASA History. NASA. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.